சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லை பகுதியில் கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, டி-2 அண்ணாசலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (11.03.2018) அப்பகுதியில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ஜானிபாட்ஷா தெருவில் ரகசியமாக கண்காணித்தபோது, அங்கு பெண் ஒருவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சாந்தி, வ/36, க/பெ.விஜயகுமார், எண்.21, சுப்புராயன் முதலியார் தெரு, பாடர் தோட்டம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 15 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.2,060/- பறிமுதல் செய்யப்பட்டது.