அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனை, உலகில் முதல் முறையாக சிறிய குழந்தைக்கு டக்டல் ஸ்டென்டிங் சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது!
· பிறந்து இரண்டு வாரங்களே ஆன ரேவதி என்பவரது குழந்தை அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அக்குழந்தையின் உடல் முழுவதும் நீலநிறத்தில் இருந்தது. மேலும் அந்தக்குழந்தை 1.19 கிலோ எடை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
· மருத்துவ சிகிச்சைகளுக்கான நடைமுறையின்படி, மூடப்பட்டிருந்த நுரையீரலுக்கு செல்லும் ரத்தக்குழாயை [PDA] திறந்தப்படி இருக்கச்செய்யும் வகையில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் அக்குழந்தை உயிர்ப்பிழைக்க முடியும்.
சென்னை – அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் ரேவதி என்பவரின் பிறந்து இரண்டு வாரமே ஆன சிறிய குழந்தை ஒன்றுக்கு, உயிரைக் காப்பாற்றும் டக்டல் ஸ்டென்டிங் சிகிச்சைமுறை [ductal stenting procedure] மூலம் புதிய வாழ்க்கையை அளித்திருக்கிறது. இந்த குழந்தை வெறும் 1.19 கிலோ எடை மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு சிறிய குழந்தைக்கு, அறுவைச் சிகிச்சைகள் எதுவுமில்லாமல் டக்டல் ஸ்டென்டிங் சிகிச்சைமுறை அளித்திருப்பது உலகில் இதுவே முதல் முறையாகும்.
ரேவதி என்பவரின் குழந்தை, ’சயனோசிஸ்’ [cyanosis] பாதிப்பு தீவிரமான இருந்த நிலையில், உயிருக்குப் போராடும் சூழ்நிலையில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸூக்கு கொண்டு வரப்பட்டது. சயனோசிஸ் பாதிப்பு ஏற்பட்டதால் குழந்தையின் உடல் முழுவதும் நீலநிறமாகி இருந்தது. மேலும் குழந்தையின் உடலில் ஆக்ஸிஜனின் அளவு வெறும் 45% மட்டுமே இருந்தது. [ஆக்ஸிஜன் இருக்கவேண்டிய அளவு 96 -100% ஆகும்]
குழந்தைக்கு மேற்கொண்ட பரிசோதனைகள், ரேவதியின் குழந்தைக்கு வெண்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட் உடன் கூடிய பல்மோனரி அட்ரெஷியா பாதிப்பு இருப்பதை காட்டின. அதாவது இதயத்திலிருந்து நுரையீரலுக்கு ரத்தம் செல்வது முற்றிலும் தடைப்பட்டது. குழந்தை தனது தாயின் வயிற்றில் இருந்தபோது, பிடிஏ குழாயின் [body tube (aorta).] உதவி மூலம் உடல் குழாயிலிருந்து நுரையீரலுக்கான விநியோகம் கிடைத்தது. இதனால் குழந்தை உயிர்ப்பிழைத்திருந்தது. பிறப்புக்குப் பின்னர், குழந்தையின் பிடிஏ ஏறக்குறைய மூடப்பட்டுவிட்டது. இதனால் நுரையீரலுக்கான விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதன் பாதிப்பாக குழந்தையின் உடல் முழுவதும் நீல நிறமாகியிருந்தது. இத்தகைய தீவிரமான சூழ்நிலையில், குழந்தையின் நுரையீரலுக்கு போதுமான அளவு ரத்தம் விநியோகம் ஆனால் மட்டுமே உயிர்ப்பிழைக்க முடியும் என்ற உயிர் போராட்டத்தில் குழந்தை அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.
மிகவும் சிறிய குழந்தையாக இருந்தப்படியால், அறுவைச்சிகிச்சை மிகவும் ஆபத்தில் முடியும் வாய்ப்பிருந்தது. இதனால், மருத்துவர்கள் மூடப்பட்டிருந்த பிடிஏ-ல் ஸ்டென்ட் ஒன்றை வைத்து, அதை திறந்து இருக்கும்படியான மருத்துவ வழிமுறைகளை மேற்கொண்டனர். இதன் பலனாக பிடிஏ திறந்து இருப்பதால், குழந்தை உயிர்ப்பிழைக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்த மருத்துவ வழிமுறை, உலகிலேயே ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறிய குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் நவீன மருத்துவ வழிமுறை குறித்து விளக்கிய அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைகளின் இண்டர்வென்ஷனல் ப்டியாட்ரிக் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். முத்துக்குமரன். சி.எஸ். [Dr. Muthukumaran CS, Consultant, Interventional Pediatric Cardiologist, Apollo Children’s Hospitals] ‘’குழந்தையின் நிலையைக் கண்டு அவசரகால நடவடிக்கையாகவே மருத்துவ வழிமுறைகளை மேற்கொண்டோம். இந்த மாதிரி சிறிய குழந்தைகளின் தமனிகள் மிகச்சிறியதாகவே இருக்கும். அதனால் நாங்கள் மிகச்சரியான ஃபெமோரல் நரம்பினைத் [femoral vein] [ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும் நீல ரத்தத்தை இதயத்திற்கு எடுத்து செல்ல உதவும் தொடைப் பகுதியில் இருக்கும் நரம்பு] தேர்ந்தெடுத்து, அதன் வழியாக ஒரு வயரை உள்நுழைத்து அனுப்பினோம். எக்ஸ்-ரே உதவியுடன் இதயத்தின் வழியாக மூடப்பட்டிருந்த பிடிஏ-யை அந்த வயர் சென்றடைந்தது. குழந்தை மிகக்குறைந்த எடையுடன் இருந்தால், மருத்துவ வழிமுறைகளை நாங்கள் மேற்கொண்டபோதும், முடித்தப்பின்பும் சின்னச்சின்ன சிக்கல்களை கொடுத்தது. ஆனால் எங்களது மயக்க மருத்துவக்குழு மிக சாமர்த்தியமாக அச்சூழ்நிலையை சமாளித்தது. குழந்தையின் இதயத்துடிப்பு 70 ஆக குறைந்துவிட்டது. ஆனால் நாங்கள் மிகச்சரியான தருணத்தில் பிடிஏ-க்கு ஸ்டென்டை பொருந்திவிட்டோம். அதனால் குழாய் திறந்து கொண்டது. குழந்தையின் செறிவூட்டல் அளவு 85% ஆக முன்னேற்றமடைய, சுவாச இயந்திரத்தை அகற்றிவிட்டோம். இதற்கு பிறகு அக்குழந்தை ஒரு நாள் தங்கியப் பின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது’’ என்றார்.
அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைகள். அதிநவீன 3டி வசதிகளுடன் கூடிய ‘அஸூரியன் கேத் லேப்’ மருத்துவ வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இவ்வசதியைப் பெற்றிருக்கும் ஒரே குழந்தைகள் நல மருத்துவமனை அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைகள் மட்டுமே. மேலும் எந்தவொரு அவசரக்கால மருத்துவ நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு தயாராக இருக்கும் வகையில், அருகிலேயே அறுவைச்சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வசதிகளை கொண்டிருக்கிறது. தழும்புகள் எதுவுமில்லாமல், பின் ஹோல் டெக்னிக் எனப்படும் துளையிட்டு மேற்கொள்ளப்படும் நுட்பத்தின் மூலம் எண்ணற்ற இதய பிரச்னைகளை சரி செய்திருக்கிறது இம்மருத்துவமனை. இதுபோன்ற அறுவைச் சிகிச்சை இல்லாமலே, ’வால்வு ரீப்ளேஸ்மெண்ட்’ உள்ளிட்ட 4,000 மருத்துவ நடைமுறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது அப்பல்லோ குழந்தைகள் நல மருத்துவமனைகள்.
தற்போது ரேவதி அவர்களின் குழந்தை வீட்டில் இருக்கிறாள். மிக விரைவாக குணமடைந்து வருகிறாள். அவள் வளர்ந்ததும் [தற்போது 1.8 கிலோ எடை], சீர்ப்படுத்தும் அறுவைச்சிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த சீர்ப்படுத்தும் அறுவைச்சிகிச்சையில், வால்வ் உடன்கூடிய குழாய் ஒன்று இதயத்தின் வலதுப்பக்கத்திலிருந்து நுரையீரல் குழாய்க்கு வைக்கப்படும்.
பி / ஓ ரேவதி வீட்டிலேயே உள்ளது. அவள் வளர்ந்தவுடன் (அவள் இப்போது 1.8 கிலோ), அவர் ஒரு சரியான அறுவை சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும், அங்கு ஒரு வால்வு குழாய் இதயத்தின் வலது பக்கத்திலிருந்து நுரையீரல் குழாய் வரை பொருத்தப்படும்.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் பற்றி…
சென்னையில் 1983-ம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனை முதன்முதலாக டாக்டர் பிரதாப் ரெட்டியால் தோற்றுவிக்கப்பட்டது. இதுவரை அப்பல்லோ மருத்துவமனைகளில் இந்தியாவிலேயே அதிக அளவாக 1 லட்சத்து 60 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புற்று நோய் சிகிச்சை அளிப்பதில் அப்பல்லோ மருத்துவமனை உலகின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக திகழ்கிறது. உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதிலும் இந்த மருத்துவமனை உலகில் முன்னணி மருத்துவமனையாகத் திகழ்கிறது.
ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழும்மாக அப்பல்லோ குழுமம் திகழ்கிறது. தற்போது 64 மருத்துவமனைகளில் 10,000 படுக்கைகள் உள்ளன. 2,500 மருந்தகங்கள், 90 ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் 80-க்கும் மேற்பட்ட அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன. மருத்துவ காப்பீடு உட்பட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகிறது. உடல்நல காப்பீடு சேவைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த உடல்நல ஆரோக்கிய சேவைகளை சர்வதேச ஆலோசனை திட்டங்களுக்கான திறன் கொண்ட 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றையும் கொண்டிருக்கிறது. இவற்றின் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக இதன் ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் மருத்துவதுறையில் மிகப்பெரும் சாதனையாக கருதப்படும் ப்ரோட்டான் தெரபி மையத்தை ஆசியா, ஆஃப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சென்னை என பரவலாக பெரும் முதலீட்டில் செயல்படுத்தி வருகிறது. முழுவதும் ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்போலோ மருத்துவமனை குழுமம் 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் தொடுகிறது.
இந்திய அரசாங்கம் அப்பல்லோ மருத்துவமனைக்காக நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்த்த்து இதுவே முதல் முறை. அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு 2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்குவதில் அப்பல்லோ முன்னணி வகிக்கிறது. அப்பல்லோ குழுமம் உலகளவிலான சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் முன்னணி இடம் வகிக்கிறது