September 24, 2023

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் – ஆரி..!

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்…
அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளான ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் நடத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது தமிழர் விழாவின் மூன்றாம் நாளான ஜூலை 2 -ம் தேதி 2018 அன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆரி கலந்து கொண்டு சிறப்பித்தார், 
இவ்விழா மேடையில் தமிழர்களின் ஆரோக்கிய வாழ்வு மேம்பட அக்கறை கொண்டு  அயராது உழைக்கும் நடிகர் ஆரிக்கு, பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருவதற்காகவும், சமீபத்தில் நமது நாட்டு விதைகளை பாதுகாக்க சீனாவின் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து  கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் பதிவு செய்தார், இதுபோன்ற தமிழர்களின் சமூக நலனில் அக்கரை கொண்ட ஆரி அவர்களுக்கு ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் அமைப்புகளின் அமெரிக்கா வாழ் தமிழர்கள் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தனர்,
 
கருத்தரங்கு ;
 
அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டு பல தலைப்புகளின் கீழ் உலக தமிழர்கள் ஒருங்கிணைந்து  விவாதிக்கப்பட்ட கருத்தரங்கில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின்  மேலாண்மை அறங்காவலர் நடிகர் ஆரி நிகழ்த்திய உரை,
 
இயற்கை வேளாண்மை ;
 
விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என்கிற நம்மாழ்வாரின் கருத்துக்கு ஏற்றார்போல் நம் தமிழினத்தின் ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் அதற்கு இன்றைய உணவு கலாச்சார தீங்குகளில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்,
 
சமூகப் பார்வை;
 
இப்போதைய சமூக சூழலில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதே குறைந்து வரும் நிலையில் எதிர்கால இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கம் என்பது ஏட்டுக் கல்வியில் மட்டுமில்லாமல் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், 
 
மரபணு விதைகள் ;
 
மரபு சார்ந்த விவசாயமானது இன்றைய நாகரீகத்தால் மறக்கடிக்கப்பட்டு  மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துகிறோம், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் இன்றைய இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், இந்நிலை மாற வேண்டுமென்றால் நமது பாரம்பரிய விவசாயத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து நாம் கொள்ள வேண்டும், மாற்றம் என்பது எங்கேயோ யாரால் நிகழ்த்தப்படுவதில்லை நம்மிலிருந்து துவங்குவதே அதனால் மாற்றத்தை உணவிலிருந்தும் பாரம்பரிய விவசாயத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்,
 
மாடித்தோட்டம் ;
 
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நம் நாட்டு விதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற தன் உயர்ந்த நோக்கத்தினை பதிவு செய்ததுடன், நஞ்சில்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க  ஒவ்வொருவரும் எளிய முறையில் தங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய எளிய முறைகளையும் விளக்கினார் என்பது மிக சிறப்பு, 
 
பாராட்டு ;
 
இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வாழ் தமிழர்கள் வெகுவாக நடிகர் ஆரி அவர்களை பாராட்டி நானும் ஒரு விவசாயியாக மாறுவோம் மாற்றுவோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *