
தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு
2018 ஜீன் 18 திங்கள் கிழமை அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 11 மணிக்கு அமைப்புசாரா பெண் தொழிலாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக பணியிடங்களின் பெண் தொழிலாளர்கள் சந்திக்கிற பிரச்னைகள் குறித்து வளியுறுத்தப்பட்டது . பெண் தொழிலாளர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அவர்களுக்கும் மதிப்பளிக்கக்கூடிய வகையில் அடிப்படை வசதிகள், உபகரணங்கள், ஊதியம், பாதுகாப்பு, நலத்திட்ட உதவிகள், நிவாரணம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் என்பதை பிரதானமாக வலியுறுத்தி இக்கோரிக்கையை தமிழ்நாடு தொழிலாளர்கள் உரிமைக்கான கூட்டமைப்பு என்பது நான்கு தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த ஆண்டு உறுவாக்கப்பட்டு, மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உரிமை மீறல்களை எதிர்கொள்ளவும், அரசு தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து தலத்திட்டங்களில் பங்குபெறச் செய்யவும், சமூக நீதிக்கான விழிப்புணர்வை உருவாக்கி அருந்ததிய பெண்களை முன்னிறுத்தவும் கோரிக்கைவிடப்பட்டது
10 அம்ச கோரிக்கைகள் :-
அமைப்புசாரா மற்றும் கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ – 600 வழங்க சட்டமாக்கிடு.
பணியிடங்களில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடு.
மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் நல நீதிமன்றங்களை அமைத்து தொழிலாளர்கள் நலன் சார்ந்த வழக்குகளை விரைந்து முடித்திடு.
தோல் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாலர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கிடு.
மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு தொழிலாளர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது