November 30, 2023

அழகு நிலைய ஊழியர்களிடம் பணம், மோதிரம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற நபர்கள் கைது

சென்னை, அசோக்நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்குமாம்பலம், பிருந்தாவன் தெருவில் இயங்கி வரும் தனியார் பெண்கள் அழகு நிலையத்தில் கோமதி, வ/20, க/பெ.விஜய் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கோமதியுடன் பணிபுரியும் அபிஷா, செல்வி, அனுஸ்ரீ ஆகிய நான்கு பெண்கள் நேற்று (14.04.2018) இரவு சுமார் 8.30 மணியளவில் அழகு நிலையத்தில் பணியிலிருந்த போது அங்கு வந்த மூன்று நபர்கள் மேற்படி அழகு நிலையத்தின் உள்ளே நுழைந்து பெண் ஊழியர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அங்கிருந்த பணம் ரூ.18,500/, 4 செல்போன்கள், 1/4 சவரன் மோதிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர். இது தொடர்பாக கோமதி ஆர்-3 அசோக்நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.

ஆர்-3 அசோக்நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்நிலையில் இன்று (15.04.2018) காலை அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை போலீசார் அசோக்நகர் 4வது அவென்யூ மற்றும் 8 வது அவென்யூ சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கரவாகனத்தில் வந்த மூன்று நபர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்ததில் பிடிபட்ட மூன்று நபர்களும் மேற்படி அழகு நிலையத்தில் புகுந்து பணம், செல்போன் மற்றும் தங்க மோதிரத்தை பறித்துக்கொண்டு தப்பியதை ஒப்புக்கொண்டனர். அதன் பேரில் மூன்று நபர்களையும் கைது செய்தனர்.

போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் 1.சித்தார்த்தராஜ், வ/24, த/பெ.செல்வம், பம்மல் ரோடு, பல்லாவரம் 2.சம்சுஇம்மத், வ/23, த/பெ.ஜாகீர்உசேன், கங்கைஅம்மன் கோவில் தெரு, வடபழனி 3.சுதாகர், வ/26, த/பெ.குமாரவேல், ஆண்டவர் நகர், கோடம்பாக்கம் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கத்தி, 4 செல்போன்கள், 1/4 சவரன் மோதிரம் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *