September 30, 2023

ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்

ஆகஸ்ட் 17-ல் வெளியாகிறது ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம்

இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான வெற்றி மாறனின் Grass Root Film Company-ம், 20th Century Fox நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அண்ணனுக்கு ஜே’.

தற்கால அரசியலை நையாண்டி(political satire) செய்யும் இந்தத் திரைப்படத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ராதாரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – அரோல் கொரேலி, ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பு – G.B.வெங்கடேஷ். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்,  எழுதி இயக்கி இருப்பவர் ராஜ்குமார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

தற்போது இத்திரைப்படம் வரும் ஆகஸ்டு 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *