November 30, 2023

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.

ஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ! 
 
இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண் டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை  அமை த்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு வி ருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கல ந்துகொண்டனர் .இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம் பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.
 
 
 
இந்த விழாவில்  பேசிய S .A சந்திரசேகர் பேசியவை“
 
இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலை ஞர்களும் சிறிய வயது உடை யவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ் த்துக்கள் என பேசினார்.
 
 
இந்த விழாவில்  ஜெயசித்ரா அவர்கள் பேசியவை “
 
படக்குழுவில் உள்ள இளை ஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செ யல் பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர்.இந்த  பட ம் மாபெரும் வெற் றிய டைய  வேண்டும் .தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என பேசினார்.
 
இந்த விழாவில் ” வெப்பம் ராஜா ” பேசியவை ‘‘
 
படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார்.19 வயது  உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார்.ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பன்னிருக்கார்.,PC ஸ்ரீ ராம் அவைகளை போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை , என பேசினார்.படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம்.கண்டிப்பா அவர் மிக பெரிய நடிகராக வருவார்.ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ஆண்டனி படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை பண முடியும்.மிக சிறப்பாக செய்து உள்ளார் ” என பேசினார்.
 
விழாவில் நடிகை ரேகா பேசியவை “
 
மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள்.படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும்.ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை ‘ இவ்வாறு அவர் பேசினார்.
 
விழாவில் இயக்குனர் குட்டி குமார் பேசியவை”
 
இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம்.ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்.இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.பூமிக்கு மேல்,மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்க பட்டு உள்ளது.உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த்.மேலும்படத்தில் நடித்த அனைவரும் அரு மை யான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்கா அவர்களிடம் நல்ல திறமை உள்ளது.ரொம்ப நாளாவே மியூசிக் பன்னிருக்காங்க’ என பேசியுள்ளார்.
 
இசை அமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசியவை “
 
படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி.இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம்.வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து  உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்’ என பேசி உள்ளார்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *