இந்தப் படத்தை சிகரம் சினிமாஸ் மற்றும் Child Productions ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அ.பக்ருதீன், குட்டி மற்றும் இயக்குநர் தாமிரா மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் சமுத்திரக்கனியும், ரம்யா பாண்டியனும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், ராதாராவி, இளவரசு, சுஜா வருணி, ஹரீஷ் பெரடி மற்றும் ‘காளி’ வெங்கட், நிலானி, தமிழ்ச் செல்வி, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், எழுத்து, இயக்கம் – தாமிரா. இவர் ஏற்கெனவே ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தை இயக்கியவர். தம்பதிகள் ‘நான்’ ‘எனது’ என்ற ஈகோவை முன்னிறுத்தாமல், தம் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தி முடிவெடுப்பதன் அவசியம் உணர்த்தும் படம்.திருமணமான தம்பதிகளுக்குள் ‘ஈகோ’ என்னும் விஷம் பரவினால் அது அந்தக் குடும்பத்தில் நிம்மதி இருக்காது அதுவும் கணவனைவிட அதிக சம்பளம் வாங்கும் பெண்கள் சொல்லவ தேவையில்லை உடனே எல்லா பிரச்சனையும் வந்துவிடும்
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சமுத்திரகனி-ரம்யா பாண்டியன்
இருவருக்குமே யாரும் இல்லை என்ற நிலையில் சந்திக்கிறார்கள். பழகுகிறார்கள். விரும்பியே திருமணமும் செய்து கொள்கிறார்கள். மிடில் கிளாஸ் பேமிலியாக குடும்பத்தை நடத்தத் துவங்கும்போது இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. ‘அகர முதல்வன்’ என்னும் பையனும், ‘ஆதிரா’ என்னும் பெண்ணும்..!
குழந்தைகள் வளர, வளர அவர்களை யார் பார்த்துக் கொள்வது என்கிற பிரச்சினை இவர்களுக்குள் எழுகிறது. ஒருவரின் சம்பாத்தியத்தில் குடும்பத்தைப் பராமரிக்க முடியாது என்பதால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபடுவது எப்படி என்று யோசிக்கிறார்கள்இதனால் குழந்தைகளை கவனித்துக் கொள்ள ரம்யா பாண்டியனை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சமுத்திரகனி கூற அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ரம்யா. அதனால் சமுத்திரகனி தன் வேலையை விட்டு விட்டு குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார். ரம்யா சம்பாதிப்பதில் மட்டும் குறிக்கோள் இருக்க, சமுத்திரகனி குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்கிறார். ரம்யாவுக்கு மிகப் பெரிய கனவுகள் உண்டு. தான் சார்ந்த துறையிலேயே மேலும், மேலும் உயர வேண்டும். புதிய வீடு, கார் வாங்க வேண்டும். பிள்ளைகளை பெரிய பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் பெரிய கனவு ஆசை ரம்யா பாண்டியனின் நடவடிக்கையும் மாற, கணவன்-மனைவியிடையே சண்டை உண்டாகி பெண் குழந்தையுடன் வெளியேறுகிறார் சமுத்திரகனி .ரம்யா பாண்டியனுக்கு வேலை செய்யும் நிறுவனத்தின் உயரதிகாரி ரம்யா மீது ஒரு கண் வைத்து அவரை படுக்கையில் வீழ்த்த நேரம் பார்க்கிறார். அதே நிறுவனத்தில் ரம்யா பான்டியவுடன் வேலை செய்து வரும் சுஜாவும் தனது கிரெடிட் கார்டை மூலம் பணம் பெற்று ஆடம்பர பிரியையாக இருக்கிறார் . ரம்யாதனது கிரெடிட் கார்டை மூலம் பண உதவிகளை செய்கிறார் ரம்யா கடனைக் கட்டச் சொல்லி வீட்டுக்கு வரும் குண்டர்களின் மோசமான செயலாள் வருந்துகிறாள் ரம்யாவின் குழந்தை வீட்டில் வைத்து மேல் பூட்டு போட்டு சென்று விட்டார்கள் இந்த செயலை கண்டு ரம்யா அதிர்ச்சி அடைந்தாள் குண்டர் களை தேடி ரம்யா சென்றாள் குழந்தை மீட்டாளா?.சமுத்திரகனி தன் மனவியுடன் சேர்ந்தார்களா ? ரம்யா வேலை செய்யும் உயரதிகாரிக்கு படுக்கறைக்கு வந்தாரா? ரம்யா கிரெடிட் கடன் திருப்பி செலுத்தினாளா? இப்படி தான் கதை நகர்கிறதுபிளாஷ்பேக் உத்தியில் கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தாமிராஆண் தேவதையாக,காலையில் பிளாட் பெண்களுடன் வாக்கிங், யோகா, சிரிப்பு பயிற்சி, ஓய்வு நேரத்தில் சீட்டாட்டம் என்று சக பெண்களுடன் பழகும் சமுத்திரக்கனியின் கேரக்டர் ஸ்கெட்ச் மிக அழகு. பெண்களால் போற்றப்படும் கதாபாத்திரம், அளவெடுத்துத் தைத்த சட்டைபோல் அம்சமாய்ப் பொருந்துகிறது சமுத்திரகனிக்கு
திமிரும், நேர்மையும் கொண்ட நவீன யுவதியாக (‘ஜோக்க’ரில் அறிமுகமான) ரம்யா பாண்டியன்… நடிப்புத் துறையில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுகிறார். அப்பாவின் செல்லக் குழந்தையாக, சுட்டிக் குட்டியாக பேபி மோனிகா செம க்யூட்.
“உங்கப்பா என்னவா இருக்காரு?” என்ற டீச்சரின் கேள்விக்கு, “ஹவுஸ்ஹஸ்பெண்டா இருக்காரு” என்று சொல்ல, வகுப்பறையின் சிரிப்பலை தியேட்டரிலும் பரவுகிறது 😀 அதென்ன, பெண் மட்டும்தான் ஹவுஸ்ஒய்ஃபா இருக்கலாமா ? ஆண் ஹவுஸ்ஹஸ்பெண்டா இருக்குறதுல என்ன தப்பு ? என்ற கேள்வியை மெதுவாக நம்மிடம் வீசுகிறார் இயக்குநர் தாமிரா ?அதிரடி அடிதடி, ரத்த வன்முறை, இல்லாத படம் ஆண் தேவதை நம்மை ஆளும் தேவதையாக வளம் வருகிறார்
.