November 28, 2023

இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!

இசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!
 
ஆல்பம் பாடல்களுக்காகவே மியூசிக் சேனலை துவக்கும் ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’..!
 
ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும்  ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!
 
திரைப்பட பாடல்கள் இல்லாமல் ஒளிபரப்பாக தயாராகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!
 
பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது..
 
ஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
 
விரைவில்  இந்த LM TV தனது ஒளிபரப்பை துவங்க இருக்கிறது. இசை ஆல்பம் உருவாக்கி, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரத்துடிக்கும் திறமையாளர்களுக்கு பணமும் புகழ் வெளிச்சமும் ஒருசேர கிடைக்கும் என்பதால் இந்த சேனல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *