சென்னை, ராயப்பேட்டை, அம்மையப்பன் தெரு, எண்.27/77 என்ற முகவரியில் பழனிவேல், வ/30, த/பெ.நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக டாடா ஏஸ் வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 10.03.2018 அன்று தனது டாடா ஏஸ் வாகனத்தை (கூசூ 02 ஹஏ 6333) ராயப்பேட்டை, தெய்வசிகாமணி சாலையில் நிறுத்தி விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்த போது மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை யாரோ திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பழனிவேல் இ-2 இராயப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இ-2 ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு பதிவுகளை வைத்து விசாரணை செய்து மேற்படி டாடா ஏஸ் வாகனத்தை திருடிய 1.ஜெகதீசன், வ/21, த/பெ.ராஜேந்திரன், எண்.75, புதுத்தெரு, குடவாசல், திருவாரூர் 2.டி.சதீஷ், வ/30, த/பெ.தங்கவேல், எண்.172, அன்னை வேளாங்கண்ணி கோயில் தெரு, ஓடைக்குப்பம், பெசன்ட் நகர் 3.தனசிங், வ/24, த/பெ.குணசேகரன், எண்.68, மாரியம்மன் கோயில் தெரு, பாவூர் கிராமம், செய்யாறு தாலுகா, திருவண்ணாமலை மாவட்டம் 4.சதீஷ், வ/30, த/பெ.பெரியண்ணன், டாக்டர்.நடேசன் ரோடு, திருவல்லிக்கேணி ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து டாடா ஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட டி.சதீஷ் மீது ஜெ-7 நீலாங்கரை காவல் நிலையத்தில் செயின்பறிப்பு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.