September 24, 2023

இரும்புத் திரை வெற்றிச் சந்திப்பு

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ .
 
விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா  நடைபெற்றது.
 
இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி  வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய வசனகர்த்தா பொன் பார்த்திபன், ” நண்பர்களின் மூலம் என்னைப் பற்றி அறிந்து படத்துக்கு வசனமா  எழுத என்னை அழைத்தார் மித்திரன் . விளைவாக இப்படி ஒரு சிறந்த படத்தில் பணியாற்றும்  வாய்ப்பு கிடைத்தது . 
 
பல  கான்ட்ரவர்சியான வசனங்களை விஷாலும் அர்ஜுனும் யாருக்கும் அஞ்சாமல் பேசினார்கள். அவர்களுக்கு நன்றி ” என்றார் .
 
இன்னொரு வசனகர்த்தாவான ஆண்டனி பாக்யராஜ், ” நாங்கள் படத்துக்கு என்று எழுதிய பல வசனங்களை விஷால் சார் எலக்ஷன் மீட்டிங் ல போய் பேசிட்டு வந்துடுவார் .
 
அதனால நாங்க புதுசு புதுசா எழுத வேண்டி இருந்தது” என்று பேசி நிகழ்ச்சியை கலகலக்க வைத்தார். 
 
எடிட்டர் ரூபன் தன் பேச்சில்,  ”  நானும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் , மித்திரன் மூவரும் நண்பர்கள். மூவரும் ஒன்றாக சினிமாவில் சாதிக்கக் கனவு கண்டவர்கள். நானும் ஜார்ஜ் வில்லியம்சும் ஓரளவு பெயர் வாங்கி விட்டோம் .
 
ஆனால் மித்ரனுக்கு ரொம்ப தள்ளிப் போனது .  இந்தப் படத்தில் எங்களோடு அவனும் ஜெயித்து இருக்கிறான். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது . 
 
வில்லன் கேரக்டருக்கு அர்ஜுன் சார் ஒத்துக் கொண்டதால்தான் இப்படி சிறப்பாக அந்த ஒயிட் டெவில் கேரக்டர் வந்தது. இல்லாவிட்டால் வந்திருக்காது .
 
சினிமா கலைஞர்களிடம் இருக்கக் கூடாத விஷயம் ஈகோ . அப்படி இல்லாமல் இருந்தால் நிறைய நல்ல படைப்புகள் இன்னும் வரும் ” என்றார் 
 
நடிகர் அர்ஜுன் பேசும்போது,“இரும்புத்திரையைப் பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி.
 
நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம்தான் கற்க வந்தார்.
 
ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரையலுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது.
அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன். அவரும் விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று, 
 
வெற்றிகரமான ஹீரோவாக , தயாரிப்பாளராக , நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது. இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லன்னாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது. 
 
நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார்” என்றார் .
 
இயக்குனர் மித்ரன் தன் பேச்சில், 
” ரூபன் மூலம்தான் எனக்கு விஷல் சாரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது .
 
கதையை ஏற்று நடிக்கவும் தயாரிக்கவும் வந்தது மட்டுமல்ல… படத்தின் மேக்கிங்கில் எந்த வித காம்ப்ரமைசும் செய்யாமல் முழுக்க முழுக்க சிறப்பாக செலவு செய்து தயாரித்தார் . 
 
அர்ஜுன் சார் இந்தப் படத்தில் வந்த உடனேயே படத்தின் மதிப்பு பெரிதாகி விட்டது . 
 
ஊடகத்துறையினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இந்தப் படத்துக்கு கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி ” என்றார் 
விஷால் தனது பேச்சில் ,“இந்தப் படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன்.
 
படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமான பின்பு கதாநாயகியாக  தக்க வைத்துக் கொள்ள முடியாது  என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. 
 
இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போதுதான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம்  கொண்டு வந்தார்  இன்னொரு நண்பன்  சொத்துப் பத்திரத்தை  கொண்டு வந்தார். 
ஏன் என்னுடைய படத்தை வெளிவர விடாமல் தடுக்க முயன்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை.
 
தயாரிப்பாளர்  சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
 
தயாரிப்பாளர் சங்கத் தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.
படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது. 
 
ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது. 
 
படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி” என்றார் விஷால்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *