ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேசன் என்ற பட நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரிக்க,
ஜெகா, உமேஷ் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லுப்னா, நிகாரிகா, சஹானா,
மற்றும் ராஜேஷ்,ரவிமரியா, டெல்லி கணேஷ், ஆர்.சுந்தர்ராஜன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்க கதை திரைக்கதை வசனம் எழுதி,
முக்கிய வேடம் ஒன்றில் நடித்து A.R.ஜெயகிருஷ்ணா இயக்கம் படம் “ உன்னால் என்னால் “
ஒளிப்பதிவு – கிச்சாஸ் / இசை – முகமது ரிஸ்வான்
பாடல்கள் – தமிழமுதன், கருணாகரன், பொன்சீமான்.
எடிட்டிங் – M.R.ரெஜிஷ் / கலை – விஜய்ராஜன்
நடனம் – கௌசல்யா / ஸ்டன்ட் – பில்லா ஜெகன்.
தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன்.தயாரிப்பு – ராஜேந்திரன் சுப்பையா.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A.R.ஜெயகிருஷ்ணா.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படம் பற்றி கூறிய இயக்குனர் , “பணம் என்பது இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று தான்.
தேவைக்கு பணம் சேர்த்தால் பரவாயில்லை.. ஆடம்பரத்துக்கும் பகட்டுக்கும் என்று சேர்க்க நினைத்தால் குறுக்கு வழிக்குத்தான் போக வேண்டும்.மிகப் பெரிய பணக்காரர் ராஜேஷ். அவருக்கு செக்ரட்டியாக இருக்கும் சோனியா அகர்வால் ராஜேஷை கொலை செய்து விட்டு,
அந்த சொத்துக்கள் அனைத்தையும் அபகரிக்க திட்டமிடுகிறார் அந்த வலையில் வந்து சிக்குகிறார்கள் ஜெகா, உமேஷ் ஜெயகிருஷ்ணா மூவரும்.
இவர்களை வைத்து ராஜேஷை கொலை செய்ய சோனியா போட்ட சதி திட்டம் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் கதை.இதை வேகமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பாக படமாக்கி உள்ளோம்.
அமைதியான கடலுக்குள் தானே ஆக்ரோஷமான புயலும், பூகம்பமும் ஒளிந்திருக்கிறது. அது மாதிரி,
சோனியா அகர்வாலின் அமைதியான தோற்றத்தை மாற்றி வில்லியாக நடிக்க வைத்திருக்கிறோம்.
உன்னால் என்னால் படம் வித்தியாசமாக இருக்கும்” என்றார்