மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, சிலம்பரசன், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் , ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ,
பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, தியாக ராஜன் நடிப்பில் மணிரத்னம் தயாரித்து சிவா ஆனந்துடன் எழுதி ,மற்றும் இயக்கி இருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா !
கண்களை விரிய வைத்த வண்ண ஒளிக்கற்றைக் (லேசர்) காட்சியில் படத்தின் ஒரு பாடலை பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் ஏ ஆர் ரகுமான் .

“மணிரத்னம் நடித்த எட்டு படங்களில் நான் நடித்து விட்டேன் என்று எல்லோரும் பொறாமையும் ஆச்சர்யமுமாக பார்க்கிறார்கள் பேசுகிறார்கள்

ஆனால் பனிரெண்டு படங்களில் நான் இல்லையே என்ற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு ” என்றார் அரவிந்த்சாமி .
அதிதி ராவ் கூட தமிழில் பேச ஆரம்பித்தார் .
வைரமுத்து அழகுத் தமிழில் அற்புதமாக ஓர் உரையாற்றி எல்லோரும் அந்த உணர்வில் இருந்த போது கூட,
திட்டமிட்டு ஆங்கிலத்தில் பேசியபோது
தமிழில் பாடி பேசி பிழைத்துக் கொண்டு எப்படி இவர்கள் எல்லாம் இப்படிப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய ஆச்சர்யம் !
நன்றி சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை . என்று சொல்லி விட்டு ,
மணிரத்னம் படத்தில் நடிக்க கிடைத்தது பெரிய வாய்ப்பு என்றார்கள் அருண் விஜய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும் .
வைரமுத்து தனது பேச்சில் , ” படத்தின் தலைப்பு அற்புதமானது . இதை உச்சரிக்கும் போது ச் என்ற எழுத்துக்கு ,
அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும் . அங்கேதான் தமிழ் அழுத்தமாக உட்கார்ந்து இருக்கிறது

இத்தனை வருடமாக மணி ரத்னம் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்கிறார் என்றால் அவருக்குள் இருக்கும் கலை உணர்வுதான் காரணம் .
மணிரத்னம் தயாரித்த தயாரிப்புகளிலேயே மிகச் சிறந்த தயாரிப்பு ஏ ஆர் ரகுமான்தான் .

இந்தப் படத்தில் நான் எழுதிய ஒரு கவிதைக்கு மெட்டுப் போட்டு பாடல் ஆக்கி இருக்கிறார்கள் .
பாரதியார், நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை இவர்களுக்கு பிறகு கவிதை பாடலாக்கப் பட்ட பெருமையை எனக்கும் கொடுத்து இருக்கிறார்கள். அதற்காக நன்றி ” என்றார் .

” உயிரே படத்தில் இடம் பெற்ற உயிரே உயிரே பாடல்தான் . எனது பாடல்களிலேயே சிறப்பாக படமாக்கப்பட்ட பாடல் என்று நான் நேசிப்பவை மூன்று பாடல்கள் .
கே. பாலச்சந்தரின் புன்னகை மன்னனில் இடம் பெற்ற ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் … பிறகு இந்த உயிரே உயிரே பாடல்” என்றார் .

ஏ ஆர் ரகுமான் சொன்ன பாடல் .. ” கண்ணாளனே .. எனது கண்ணை .. ” பாடல் என்றார் .

என் ஜீவனே .. என் நண்பனே .. என் அன்பனே என்று என்ன சொல்லியும் மணிரத்னம் திருப்தி அடையவில்லை .
கடைசியில் கொஞ்சம் பழசா சொல்லட்டுமா என்றேன் . சொல்லுங்க என்றார் மணி ரத்னம் . கண்ணாளனே என்றேன் . இதான் வேணும் என்றார் மணிரத்னம்

அது மட்டுமல்ல …
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏ ஆர் ரகுமானின் ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்து போடச் சொல்லி விரும்பிக் கேட்டு விட்டுப் போன பாடல் அது ” என்றார்