ரெட் ஜெயன்ட் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட , இயக்குனர் முகமது அசலம்
பிரபல நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடிக்க யோகிபாபு, ஜார்ஜ், ஆதிரா பாண்டி லட்சுமி , சுஜோ மாத்யூஸ், கிரண் ஆர்யன் , கோவை பானு, செந்தில் லலிதா உடன் நடிக்கிறார்கள்
,காளி ரங்கசாமி எழுதி இயக்கி இருக்கும் படம் ‘ கதையை பார்ப்போம்
கூவத்தின் கரையில் பிறந்து வளர்ந்து , சென்னையில் குப்பை அள்ளும் வேலை செய்யும் மாநகராட்சி ஊழியனான ஓர் இளைஞன் ( மாஸ்டர் தினேஷ்) ,
இவருக்குத் திருமணம் செய்து வைக்க இவரது அம்மா பெரும்பாடுகிறார். ஆனால் பொண்ணுதான் கிடைத்தபாடில்லை. குப்பை அள்ளுகிறார் என்பதாலேயே பெண் கிடைக்காமல் போகிறது. வேறு வழியில்லாமல் ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பார்களே என்ற நினைப்பில் பொய் சொல்லியாவது திருமணத்தை நடத்தி வைக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.
வால்பாறையில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்கிறார்கள். அங்கே மணிஷா யாதவை பார்த்த உடனேயே தினேஷுக்கு பிடித்துப் போய்விடுகிறது. மணிஷாவுக்கும்தான் தினேஷ் சென்னையில் ஏதோ கிளார்க் வேலை பார்ப்பதாக புரோக்கர் பொய் சொல்லியிருப்பதை தெரிய தினேஷ் மணீஷாவின் அப்பாவை தனியே அழைத்து உண்மையைச் சொல்லி விடுகிறார். அவருடைய நல்ல மனதை எண்ணிய மணிஷாவின் அப்பா அவருக்கே தன் மகளைத் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்.
ஆனால் இந்த வேலை விஷயத்தை மட்டும் மகளிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் குப்பை அள்ளுளும் வேலை தெரியவருகிறது இதனால் தினேஷ் யை வெறுக்கிறாள்அவனோடு வாழ்ந்து குழந்தைக்கு தாயாகிறாள் .
பிரசவத்துக்கு தாய் வீடு போன அவளை மீண்டும் கூட்டி வரப் போனால், பிள்ளையோடு என்னால் கூவக்கரையில் வாழ முடியாது என்கிறாள்
அந்தக் குடிசைப் பகுதியின் சூழல் என் குழந்தையை வளர்க்க ஏற்ற இடம் அல்ல என்கிறார் மணிஷா. இதையடுத்து தினேஷ் தனது சூப்பர்வைஸரின் அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டில் வாடகைக்கு குடி போகிறார் .குடி போகிறார். அதே அபார்ட்மெண்ட்டில் எதிர் வீட்டில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்யும் சுரேஷ், மணிஷாவின் அழகைப் பார்த்து ரசிக்கிறார். மணிஷாவை தன் வலையில் விழவைக்கிறான் நடந்தது என்ன என்பதே இந்த படம் .காணாமல் போன அதிர்ச்சியில் குடிகாரனாகிறார் தினேஷ். மணிஷாவை பல இடங்களில் தேடி அலைகிறார். இந்த மன உளைச்சலில் தினேஷின் தாயும் இறந்து போகிறார் காணாமல் போன தன் மனவி மணிஷாவையும், குழந்தையையும் கண்டுபிடித்தாரா இல்லையா..?தினேஷ். முடிவு என்ன ஆனது..? புதிய கதை களம் அமைத்திருக்கிறnர் கதை, திரைக்கதையில் அழுத்தமான இயக்கத்தையும் கொடுத்திருக்கும் அறிமுக இயக்குநர் காளி ரங்கசாமி பெரும் பாராட்டுக்குரியவராகிறார்
ங்கோத்தான்னுதான் பேசும்” என்று கதாநாயகி சொல்லும் வசனம் பளீர்