September 25, 2023

ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் ‘அர்ஜுனா’ திரைப்படம்..!

Spicy Cloud Entertainments நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் K.லோகநாதன் தயாரிக்கும் புதிய திரைப்படம்  ‘அர்ஜுனா’.இந்தப் படத்தில் விஜய் சந்தோஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மேலும் நாசர், பால சரவணன், சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

M.A.ராஜதுரை ஒளிப்பதிவு செய்ய, கிருஷ்ணமூர்த்தி படத் தொகுப்பு பணியை மேற்கொள்ள, நிர்மல் இசையமைக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீமணி இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் பூஜை மற்றும் படத் துவக்க விழா சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் படத் துவக்க விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வைத்து, படக் குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இந்த ‘அர்ஜூனா’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *