June 8, 2023

கடிகார மனிதர்கள் படம் விமர்சனம்

கடிகார மனிதர்கள் – சினிமா விமர்சனம்

Christ P The International Productions நிறுவனத்தின் சார்பில் பிரபீஷ், பிரதீப் ஜோஸ் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

 

படத்தில் கிஷோர், லதா ராவ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாகரன், பிரதீப், ஷெரின், வாசு விக்ரம், பாலாசிங், சிசர் மனோகர், பாவா லட்சுமண், செளந்தர், ஷீலா கோபி, மாஸ்டர் ரிஷி, விஜயா பாட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – உமாசங்கர், இசை – சி.எஸ்.சாம், பாடல்கள் – கார்க்கி பவா, வைகறை பாலன், படத் தொகுப்பு – ஹரிசங்கர், கலை இயக்கம் – பி.ராஜூ, நடன இயக்கம் – கூல் ஜெயந்த், ராதிகா, சண்டை இயக்கம் – மகேஷ், தயாரிப்பு – கே.பிரவீஷ், பிரதீப் ஜோஸ், எழுத்து, இயக்கம் – வைகறை பாலன்.  

கிராமங்களிலிருந்து சென்னை போன்ற மாநகரங்களுக்கு பிழைப்புத் தேடி வருகிற மக்கள்

வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை நடுத்தர குடும்பத்தினர் படும் கஷ்டங்கள்தான் படத்தின் கதைக் கரு.

கிஷோர் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். பேக்கரியில் ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் வாடகை வீடு தேடும் கிஷோர்

வீடு கிடைப்பது பெரும்பாடாக இருக்கிறது   .

சிசர் மனோகர் வீட்டு புரோக்கர் தனக்கு கமிஷன் கிடைக்குமே என்ற எண்ணத்தில் “ஒரு பையனை கொஞ்ச நாளைக்கு மறைச்சு வைச்சுக்குங்க. அதுக்குள்ள வேற நல்ல வீடு நானே பார்த்துச் சொல்றேன்…” என்று ஐஸ் வைத்துவிட்டுப் போகிறார்.

இதனால் வேறு வழியில்லாமல் கடைசி மகனை மட்டும் நடு இரவில் அவனை எல்லோருக்கும் பொதுவான கழிப்பறையைப் பயன்படுத்த வைப்பது என்று பல சிரமங்களை அனுபவிக்கின்றனர்.  பள்ளிக்கு அழைத்து செல்வதும் ரொட்டி பெட்டிக்குள் வைத்து வீட்டுக்குள் கொண்டு வருவது கிஷோர். நமக்கு மனசு கனக்கிறது  பெற்ற மகனை இப்படி மறைத்து வைத்துவாழ்வது எவ்வளவு கொடுமை  வாசுவிக்ரமிடம் சைக்கிளை இழந்துவிட்டு தவியாய் தவிப்பதும், பையன் பள்ளி மேடையில் வாங்கிய பரிசினைகூட பெற முடியாமல் தவிக்கும் தவிப்பும், இறுதியில் மீண்டும் தெருவுக்கே வந்து நிற்கும் சோகத்தை சந்திக்கும் அவலமும் இப்படியொரு கொடுமை எந்தவொரு குடும்பத் தலைவனுக்கும் வரவே கூடாது

வீட்டு உரிமையாளர் பாலசிங் ஆயிரம் நிபந்தனைகள். விருந்தாளிகள் வந்தால் ‘எத்தனை நாளைக்கு தங்குவார்கள். சீக்கிரம் ஊருக்கு அனுப்புங்க , தண்ணீர் சிக்கனம், இரவு பத்து மணிகுள் வீட்டுக்கு வந்து விடனும் குழந்தையின் விளையாட்டு சிரிப்புக்கும் தடை சென்னையில் சொந்த வீட்டுக்காரன் தான் உயர்ந்தவன் வாடகை குடியிருப்போர் இந்த மண்ணில் வாழ தகுதி இல்லாதவன் இந்த சூழ்நிலை  எதிர் நோக்கி எப்படி வாழ்கிறார் என்பதை அப்படியே காட்டி உள்ளர் இதில் கிஷோர் குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பாவாகவும், வீட்டு உரிமையாளரிடம் அப்பாவியான  நடிப்பு வாடகை குடியிருப்போர் வாழ்க்கை  அற்புதமான நடித்துள்ளார் வாழ்ந்து உள்ளார் அவருடைய மனைவியாக நடித்த லதாராவ் பிரம்மாதம்   கருணாகரன் பணத்துக்காக வீட்டுகாரர் மகளைக்க காதசிக்கஅலையும் கேரக்டரில் நடித்திருக்கிறார். அவருடைய பாட்டியாக நடித்தவர் இந்தப் பொண்ணை காதலிக்கத்தான் என்னை பாட்டின்னு சொன்னியா என்று கேட்கும் காட்சியில் உருக வைத்திருக்கிறார்

வீட்டுப் பொருட்களை வேனில் ஏற்றிக் கொண்டு வீடு தேடி அலைந்து கொண்டிருக்கிறார். வீட்டு புரோக்கர் சிசர் மனோகர் நடிப்பு Super

பலருக்கு வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் பிரச்சினை என்று இந்த அவலத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறுகிறார்கள் மக்கள்.

அவர்களில் ஒருவரது கதையை படமாக்க நினைத்த இயக்குனர் வைகறை பாலனுக்கு நமது பாராட்டுக்கள். வாழ்த்துகள்

 குழந்தையை ரொட்டி பெட்டி மறைத்து கொண்டு போய் வரத்து கொஞ்சம் அதிகமாக உள்ளது பாசமுள்ள குடும்பத் தலைவன் அப்படி செய்ய மாட்டார்கள் அந்த காட்சி நம்ப முடியவில்லை. கிளைமாக்ஸ்க  காட்சி சைக்கிள் பந்தயம் வெற்றி கிஷோர் வாழ்ந்து  இருந்தால் நன்றாக இருந்திருக்கும்  மற்றும்அனைத்து தொழில் நுட்ப கலைஞர் வாழ்த்துதுகள் இந்த படம் அனைவரும் பார்க்க  வேண்டிய படம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *