
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விமலா ராஜநாயகம், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார்.
மேலும், திரைப்படங்கள் வாயிலாக சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்வதற்காக ‘கதிர்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து வரும் விமலா ராஜநாயகத்தை கெளரவிக்கும் வகையில்,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த அஜந்தா பைன் ஆர்ட்ஸ் அவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மருமகளும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன்,
ஜாய்ண்ட் கமிஷ்னர் கோமதி ஐ.ஆர்.எஸ் மற்றும் திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகை நீலிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, விமலா ராஜநாயகத்திற்கு சாதனைப் பெண்மணி விருது வழங்கினார்கள்.