November 28, 2023

கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்.

கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர்  A.வெங்கடேஷ்ன் “நேத்ரா” டீம்.
22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டினார். பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயத்தை, சின்ன தயாரிப்பாளர் மத்தியில்  அசாத்தியமான செயலை சாத்தியமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.
 
இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவு – ஜெயப்பிரகாஷ், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – என்.கணேஷ்குமார், வசனம் – அஜயன்பாலா, கதை, திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ். தயாரிப்பு – பர.ராஜசிங்கம், ஏ.வெங்கடேஷ்.
லைன் புரொட்யூசர் – குமரவேல் பாண்டியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *