விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை அடுத்து வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க,
விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி, இந்துஜா, குமாரவேல், சரத், மதுமிதா, மோகன்ராம் , அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில்,
மொழி , பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ’60 வயது மாநிறம்’.
படத்துக்கு இசை இளையராஜா .
விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார்.
பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.
காணமல் போன பிரகாஷ் ராஜை கண்டு பிடிப்பதுதான் படத்தின் கதையாம் .
படப்பிடிப்பு முடியும் வரை ரகசியமாக வைத்து இருந்து, இப்போதுதான் விசயத்தையே வெளியே சொல்லி இருக்கிறார் தாணு .
படப்பிடிப்பு முடிந்து பின் பணியாக்கம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் , இந்த ஆகஸ்டு மாதமே படம் திரைக்கு வருகிறது