
காயத்ரி கதாநாயகியாக நடிக்க , இன்னொரு ஹீரோவாக மயில்சாமி நடிக்க
இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் ஆகியோர் நடிக்க ,
கதை, திரைக்கதை, வசனம், எழுதி கே.எஸ்.பழனி என்பவர் இயக்கி இருக்கும் படம் காசு மேல காசு
இசை பாண்டியன், கேமரா சுரேஷ்தேவன், பாடல்கள் கருப்பையா.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், P.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் டிரைலர் மயில்சாமியின் காமடியோடு துவங்குகிறது . .பாடல்கள் நன்றாக இருக்கின்றன .
நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், பி. வாசு , பாண்டியராஜன் , நடிகர் விவேக் ஆகியோர் எம் ஜி ஆர் மீது மயில்சாமிக்கு உள்ள பற்றையும் எம் ஜி ஆர் போலவே மயில்சாமிக்கும் இருக்கும் கொடுக்கும் குணத்தையும் புகழ்ந்தனர் .
“தன்னிடம் உள்ள காசை எல்லாம் அள்ளிக் கொடுத்து விட்டு ஆட்டோவுக்கு காசு இல்லாமல் நிற்கும் அளவுக்கு மயில்சாமி நல்லவர் ‘ என்றார் விவேக் .
மயில்சாமியின் கொடுக்கும் குணம் இனி அவரது மகனுக்கு வெற்றிகளாக குவியும் என்றார் பாக்யராஜ்
கொடுக்கும் குணம் எங்கே எல்லாம் இருக்கிறதோ அங்கே எல்லாம் எம் ஜி ஆர் இருக்கிறார் என்றார் மயில்சாமி .
எனக்கு வாழ்வு கொடுத்து இயக்குனர் ஆக்கியவர் மயில்சாமிதான் என்று புகழ்ந்தார் படத்தின் இயக்குனர் பழனி
பாரதிராஜா தன் பேச்சில் “ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பது ஈஸி ஆனால் காமெடியனாக நடிப்பதற்கு நகைச்சுவை உணர்வு நிறைய வேண்டும். அந்த உணர்வு அதிகம் மிக்கவன் மயில்சாமி அதைவிட இதயம் சுத்தமானவன்.

காரணம் மயில்சாமி குபேரன் மாதிரி இருக்கிறான்
இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.நம் நிலம் களவாடப்படுகிறது, மொழி களவாடப்படுகிறது, கொஞ்சம் விட்டால் இந்த இனமே களவாடப்படும் முழித்துக்கொள். டைனோசர் இனம் அழியக்காரணம் அதனிடம் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். தமிழனுக்கு ருத்ரம் இப்போது அதிகமாக தேவைப்படுகிறது.
நானும் ஆன்மீகவாதி தான். முருகன் என்பவன் ஆறுபடை வீடுகளை ஆண்ட மனிதன். பின்னாளில் நாம் தான் கடவுள் ஆக்கிட்டோம்.
இந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் நீ யாராகவோ இரு ஆனால் ஆட்சியில் இருக்கும் அஞ்சு வருசம் P.M, C.M ரெண்டு பேருமே காமன் மேனாக இருக்க வேண்டும்.
எந்த மத அடையாளத்தையும் வெளிப்படுத்தக் கூடாது ‘ என்று ஆளுகின்ற கட்சிகளுக்கு ஏதோ உணர்த்துவதைப்போல பேசினார்.