December 9, 2022

காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் தாக்கிய வாலிபர் கைது.

இந்திராகாந்தி (எ) இந்து, வ/30, த/பெ.மணி என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து சென்னை பல்லாவரத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, விமான நிலையத்தில் உள்ள டி.எப்.எஸ் என்ற தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திராகாந்தி (எ) இந்து மேற்படி நிறுவனத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக ஏர் இண்டியா நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் சத்யபிரகாஷ் என்பவர் மேற்படி இந்திராகாந்தி (எ) இந்து என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.ஆனால் இந்திராகாந்தி காதலை ஏற்காமல் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (27.03.2018) இரவு 9.00 மணியளவில் சத்யபிரகாஷ், பல்லாவரம் பகுதியில் உள்ள துணிக்கடை அருகே மேற்படி இந்திராகாந்தி (எ) இந்துவை சந்தித்து தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார். இந்திராகாந்தி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரத்தில் சத்யபிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்திராகாந்தி (எ) இந்துவை தாக்கியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த இந்திராகாந்தி (எ) இந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இந்திராகாந்தி (எ) இந்து பல்லாவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எஸ்-5 பல்லாவரம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சத்யபிரகாஷ், வ/23, த/பெ.அருண்நேசன், எண்.63, துரைகண்ணு சாலை, ஜமீன் பல்லாவரம் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சத்யபிரகாஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *