கோவை மாவட்ட காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் சங்கத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பின்னர், சைகை முறையில் பேசிய அவர்கள், “கடந்த பல ஆண்டுகளாக வேலை வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றது. அரசு அலுவலகங்களுக்கு சென்று தகவல் அறிய முற்பட்டால் எங்களை அலைகழிகின்றனர். மேலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் இது வரை பலருக்கு வேலை கிடைக்கவில்லை.
ஒரு சதவீத வேலை வாய்ப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி துடியலூர் வேலை வாய்ப்பு அலுவலத்தை முற்றுகையிட உள்ளோம். இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு அரசு பணியிடங்களில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி
மத்திய, மாநில அரசுப் பணிகளில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு வழங்கப்படும் ஒரு சதவீத வேலை வாய்ப்பினை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.
கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி