குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் “ஸே நோ டூ ஃபியர் அன்ட் யெஸ் டூ சேஃப்டி” என்ற ஒருமித்த நல்ல முயற்சிக்காக நிக்லோடியன் சென்னைக்கு வருகிறது.
சிறந்த எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் குழந்தைகளை பங்குகொள்ள ஊக்குவிக்கிறது
சென்னை13 ஏப்ரல்: கிட்ஸ் பிரான்சைஸ்சில் முதலிடத்தில் உள்ள நிக்லோடியன், அவர்களின் உலகளாவிய சார்பு சமூக முன்முயற்சியான “டூ கெதர் ஃபார் குட்” என்ற குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய முக்கிய பிரச்சினையை எதிர்கொள்ள திரும்பி வந்துள்ளது.
சைபர் பாதுகாப்பு உலகில் அதிகரித்து வரும் சம்பவங்கள், இளம் வயதிலேயே குழந்தைகளை கொடுமைப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல், தனிப்பட்ட பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இந்த நேரத்தின் முக்கிய தேவையாகும். குழந்தைகள் நிக்கோலோடியின் பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதுடன், நடத்தை மாற்றுவதற்கான முன்முயற்சியைக் கையாளுவதற்கு நாங்கள் முன்வைத்திருப்பது “ஸே நோ டூ ஃபியர் அன்ட் யெஸ் டூ சேஃப்டி” இது அவர்களை ஊக்குவித்து பலப்படுத்துவதாகும்.இந்த முன்னோடி முயற்சியானது குழந்தைகள் ஆபத்துகளை அடையாளம் கண்டு அவற்றை பயம் இல்லாமல் கடந்து வயதுவந்தோராக ஆவது ஆகும்.
குழந்தையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுசீரமைப்பதற்கு கணிசமான கவனம் செலுத்துவதன் மூலம், நிக்லோடியோன் அரசு சாரா நிறுவனமான “அர்பன்” உடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இது சிறார் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களுக்கு பதிலளிக்க வேண்டிய தடுப்பு மற்றும் தலையீட்டுத் திறன்களைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை மேம்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்ததாகும்.குழந்தைகள் விரும்பும் நிக்டூன்ஸ் உடன் இணைந்து ஆர்பானில் உள்ள நிபுணர்கள் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக ஊடாடத்தக்க பள்ளி தொடர்புத் திட்டமான “ஸே நோ டூ ஃபியர் அன்ட் யெஸ் டூ சேஃப்டி” என்பதை நகரம் முழுவதும் நடத்தினர்.இந்த அமார்வானது பள்ளிக் கூடத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வாறு நிர்வகிக்கப்படுமென்று வழிகாட்டப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களை உள்ளடக்கியது ஆகும்.
இந்த முன்முயற்சியை பற்றி கூறிய முகமது டப்ரெஸ் பள்ளியின் முதல்வர்,” குழந்தைகள் ஆரம்பகால வாழ்க்கையில் பாதுகாப்பு விதிமுறைகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பாதுகாப்பை ஊக்குவிப்பதில் நிக்லோடியின் செயல்திறன் மிக்க ஈடுபாடு, மிகவும் முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,நாங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பை பற்றி கற்பிக்கும் பொழுது பெற்றோர்களின் தலையீடு இருக்கவேண்டும் என விரும்புகிறோம்.” என கூறினார்.
“நிக்கலோடியன் இந்தியாவுடன் “டூ கெதர் ஃபார் குட்” என்ற முன் முயற்சியில் இணைந்து பணியற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். அர்பன் 10 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளை பாலியியல் துன்புறுத்தலில் இருந்து தடுப்பது மற்றும் அந்த பாதிப்பில் இருந்து குணப்படுத்துவது ஆகியவற்றில் பணியாற்றி வருகிறது,வயது சார்ந்து அறிவு மற்றும் திறன்களைக் கொண்டு குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்திருந்தால், அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பில் பங்கேற்க முடியும் என கருதப்படுகிறது. பெற்றோரும், கவனிப்பாளர்களும், அறிவுடன் அதிகாரத்துடன் இருக்கும்போது, குழந்தைகளுக்கு விழிப்புடன் மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கு பங்களிக்கிறார்கள். இது போன்ற ஒரு முன்முயற்சி நிக்லோடியோன் ஆதரவுடன் மில்லியன் கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு தனிப்பட்ட பாதுகாப்பின் முக்கிய செய்திகளை வழங்குகிறது.” என அர்பன் புப்ளிக் எங்கேஜ்மெண்ட் இயக்குனர் சரலீன் மன்ஜீலி,கூறினார்.