பல்லாவரம், நாகல்கேணியில் இயங்கி வரும் தனியார் கூரியர் நிறுவனத்தின் மேலாளர் பிரவீன் என்பவர் ளு -6, சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தங்களது நிறுவனத்திற்கு வரும் ஆன்லைன் வர்த்தக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு சரியாக டெலிவரி செய்யாமல் பொருட்களை அபகரித்ததாக குறிப்பிட்டிருந்தார். இப்புகார் மீது விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ளு-6 சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில், மேற்படி கூரியர் நிறுவனத்தின் கிடங்கில் வேலை செய்து வந்த விக்னேஷ் பாண்டியன், பி.பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் சேர்ந்து, மேற்படி கூரியர் நிறுவனத்திற்கு வரும் அமேசான் மற்றும் பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பொருட்களை, இந்த கூரியர் நிறுவனத்தின் டெலிவரி ஆட்கள் சுப்ரமணி, தனசேகர், நந்தகுமார், ஏ.பிரகாஷ் மற்றும் அசோக்குமார் ஆகியோர் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்தது போல போலியான கையெழுத்து போட்டு பொருட்களை அபகரித்து கொண்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இவ்வாறு இவர்கள் கடந்த 6 மாதமாக பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யாமல் சுமார் 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அபகரித்தது தெரியவந்தது.
அதன்பேரில், குற்றவாளிகள் 1.விக்னேஷ் பாண்டியன், வ/28, த/பெ. மூர்த்தி, சந்தான கிருஷ்ணன் தெரு, நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை-44, 2.பிரகாஷ், வ/27, த/பெ.பாண்டியன், பாலாஜி நகர் 2வது தெரு, மடிப்பாக்கம், சென்னை, 3.ரமேஷ், வ/25, த/பெ.ராமஜெயம், ஒத்தவாடை தெரு, திருவண்ணாமலை மாவட்டம், 4.சுப்ரமணி, வ/27, த/பெ.முருகேசன், பிள்ளையார் கோயில் தெரு, நந்தம்பாக்கம், குன்றத்தூர், சென்னை, 5.தனசேகர், வ/24, த/பெ.துரை, பொன்னியம்மன் கோயில் தெரு, சேந்தமங்கலம், திண்டிவனம், 6.நந்தகுமார், வ/23, த/பெ. திருப்பதி, மோசஸ் தெரு, ஈஸ்வரன் நகர், பம்மல், சென்னை, 7.பிரகாஷ், வ/23, த/பெ.ஆறுமுகம், ரங்கநாதசாமி 1வது தெரு, லஷ்மிபுரம், குரோம்பேட்டை, சென்னை, 8.அசோக்குமார், வ/28, த/பெ.வெங்கடேசன், பெரியார் நகர், நந்தம்பாக்கம், குன்றத்தூர், சென்னை ஆகிய 8 பேரை நேற்று (30.3.2018) கைது செய்தனர். அவர்களிடமிருந்து பணம் ரூ.5,20,000/- பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.