June 1, 2023

கோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே !!!

கோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே !!! உணவு மூலம் பரவக்கூடிய கிருமிகள், ரசாயன சுவை மற்றும் நிறம் கூட்டிகளால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோகிணி ரா. பாஜிபாகரே தெரிவித்துள்ளதாவது
கவனிக்க வேண்டியவை :
1. உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் / பதிவுச்சான்றிதழ் உள்ளதா என உறுதி படுத்திக் கொள்ளவும்.
2. கடையும், கடை இருக்கும் பகுதியும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும், குப்பைகள் இல்லாமலும், சுகாதாரமாக பராமரிக்கப் பட்டிருக்க வேண்டும்.
3. விற்பனையாளரும், பழச்சாறு தயாரிப்பவரும், தன் சுத்தம், கை சுத்தம் பேணுகிறாரா என்பதை கவனிக்கவும்.
4. குளிர்பானம், பழச்சாறு செய்ய பயன்படுத்தும் பழம், பால், தண்ணீர் போன்ற மூல பொருட்கள் தரமானதாக உள்ளதா என உறுதி செய்து கொள்ளவும்.
5. கூழ், மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில்  வைத்திருக்க படவேண்டும்.
6. பழச்சாறு, குளிர் பானங்களில் பயன்படுத்து ஐஸ் கட்டிகள் நன்நீரில் செய்தவையா என்பதை உறுதி படுத்திக் கொள்ளவும்.
7. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும், மேலும் ஐஸ் கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.
8. தூசி படாதவாறும், ஈ, பூச்சிகள் மொய்க்காதவாறும், மூடி வைத்திருக்கும் பழங்கள், பழச்சாறு, பழத்துண்டுகள், ப்ரூட் சாலட்களை மட்டுமே வாங்கவும்.
9. பழங்கள் சூரிய ஒளி / வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும், சுவையும் மாறுப்பட்டு சீக்கிரம் அழுகக்கூடியவை. ஆதலால் பழங்களை சூரிய ஒளி / வெப்பம் படாதவாறு குளிர் பெட்டி  அல்லது குளிர் சாதன பெட்டியில் வைத்திருக்க வேண்டும்.
10. நீங்கள் அருந்தும் பேக் செய்யப்பட்ட தண்ணீர், பழச்சாறு, குளிர்பானங்களில் குளுளுஹஐ எண், காலாவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரி ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவும்.
11. பழச்சாறு, குளிர் பானங்களில் பயன்படுத்தும் சுவை கூட்டி, நிறக்கூட்டி ஆகியவற்றில் குளுளுஹஐ எண், காலவதி தேதி மற்றும் தயாரிப்பாளர் முகவரியை சரிபார்க்கவும்.
12. பழச்சாறு, குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை, சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் படாதவாறு மூடி வைத்து, தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்பட வேண்டும்.
13. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜூசர், வடிகட்டி போன்றவை துரு பிடிக்காமலும், தூய்மையாகவும் இருக்க வேண்டும்.
14. பழரசம், குளிர்பானம், மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க நீளமான கரண்டி உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.
15. கரும்பு சாறு எடுக்க பயன்படுத்தும் கரும்பு தோல் சீவப்பட்டும், நுனிகள் வெட்டிய பின்பும் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து கொள்ளவும்.
16. கூழ், குளிர்பானங்கள், பழச்சாறை கண்ணாடி, ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் கப்களில் மட்டுமே பருக வேண்டும்.
17. பழச்சாறு, குளிர் பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டரா-க்கள் தூசி படாமலும், ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
18. பழச்சாறுகளை பார்சல் பெற்று வாங்க ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் அல்லது கண்ணாடி பாத்திரங்களை தாங்களே எடுத்து செல்லவும்.
19. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.
 
தவிர்க்க வேண்டியவை:
1. பழச்சாறு / ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.
2. சர்பத், குளிர் பானங்களில் நீலம், ஊதா ஆகிய அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் வாங்குவதை தவிர்க்கவும்.
3. அதிகமான நிறங்கள் ரசாயனக் சுவை கூட்டி கலந்த சர்பத், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
4. ஐஸ் கட்டிகளை வைக்கோல், சனல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது.
5. குளிர் பானங்கள், பழச்சாறுகள் நேரடியாக குளிர்பெட்டியிலிருந்து பெறுவது நல்லது. ஐஸ் கட்டிகள் போட்டு தரும் குளிர் பானங்களையும், பழச்சாறுகளையும் தவிர்க்கவும்.
6. குளிர்பானங்கள், பழச்சாறு, நறுக்கிய பழங்கள் போன்றவற்றை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், கவர்களிலும் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
ஏதேனும், புகார் தெரிவிக்க விரும்பினால் 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் உணவு பாதுகாப்புத் துறையை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *