September 24, 2023

கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு…!

கோடை விடுமுறை கொண்டாட்டமாக இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அசத்த வரும் வாட்டர் வேர்ல்டு…!

ஏப்ரல் – 27 முதல்  சென்னை தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும் சுற்றுலா பொருட்காட்சி…!

கோடை விடுமுறையில் சென்னையில் நீர்வீழ்ச்சியும் படகு சவாரியும் பின்னே பனிக்குகையும்..! 

கோடையை குளிரவைக்க சென்னையை தேடிவரும் வாட்டர் வேர்ல்டு…!

சென்னையை பொறுத்தவரை கோடை விடுமுறை என்றாலே தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும்  இந்திய சுற்றுலா பொருட்காட்சி தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்தவகையில் சென்னையின் இந்த வருட கோடை விடுமுறை கொண்டாட்டமாக அமைய இருப்பது, ஏப்-27 ல் தொடங்கி ஜூன்-4 ஆம் தேதிவரை நடைபெற இருக்கும் 44வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியில் அமைந்திருக்கும்  வாட்டர் வேர்ல்டு (Water World ) ஆகத்தான் இருக்கும்.

வழக்கமான ஜெயன்ட் வீல் மற்றும் அது சார்ந்த கொண்டாட்டங்கள் மட்டுமல்லாமல்  இந்தமுறை, வாடிக்கையாளர்களுக்கு சலுகை தரும் விஷயமாக சத்யா எலெக்ட்ரானிக்ஸின் மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் மேளா நடைபெற இருக்கிறது. 

இந்தமுறை கோடையின் தீமாக நீர் உலகம் (water world) இருக்கும். ஆகையால் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ராட்சத நீர்வீழ்ச்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.. நிஜ நீர்வீழ்ச்சியில் குளிப்பது போலவே இதிலும் ஆனந்தமாக குளிக்கலாம்.. அதையொட்டி அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீந்தி மகிழலாம்..  படகு சவாரி, பனி விளையாட்டுக்கள் என இப்படி நீரை மையமாக வைத்து த்ரில்லிங்கும் பொழுதுபோக்கும் கலந்த 15க்கும்  மேற்பட்ட நீர் விளையாட்டுக்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்த காத்திருக்கின்றன. 

இந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதன் காரணமாக இந்த தீவுத்திடலில் பிரமாண்டமாக நடைபெறும்  இந்திய சுற்றுலா பொருட்காட்சிக்கு  சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை போக்ஸ் லேண்ட் (Folks Land) கவனிக்க, சந்தைப்படுத்தும் பொறுப்பை விகோஷ் மீடியா (Vgosh Media) ஏற்றுக்கொண்டுள்ளது. லட்மண் ஸ்ருதியின் மியூசிக் ஸ்டால், விதவிதமான ஆடை வகைகள், உணவுப்பொருட்கள், மின் சாதனங்கள், குழந்தைகளை கவரும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றுக்கான கடைகள் (stalls) இதில் ஏராளமாக இடம்பிடிக்கின்றன. 

கடைகள் (stalls) முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:

8608201000, 8608301000, 8428701000, 8428801000 ஆகிய எண்களில்  தொடர்பு கொள்ளலாம்.

———————————-

Chennai’s Newest destination for this Summer will be Water World at Island Ground

Chennai’s Newest destination for this Summer will be Water World at Island Ground, starting this 27th of April till the 4th of June 2018. 

Unlike the usual Giant Wheel and Entertainment, this time it has a Consumer Fair with Electronic and Home Appliance Mela from Sathya Electronics. The theme for this Summer is Water World, so the entertainment for the visitors will be a Giant waterfall where they can bath like a real one, swimming pool, boating, snow shows, thrillers, bounces, more than 15 rides and many more water-based games. 

This year the Island Ground is expected to receive more than 3 Lakhs people with the shifting of IPL matches to other cities. Organized by Folks Land and Marketed by Vgosh Media. 

It has plenty of fashion, music  stall from Lakshman Shruthi, clothing, food, electronics, kids stalls for shopping. 

For more details for stall booking or any other details please call 8608201000, 8608301000, 8428701000, 8428801000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *