கோவையில் அடுக்குமாடி வீட்டு வசதி’ திட்டத்தை “கோர்ட் யார்டு” என்ற புதிய திட்டம் அறிமுகம்…..
மத்திய மாநில அரசுகளின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் கோவையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சென்னை சோந்த XS ரியல் ப்ராப்பர்ட்டிஸ் கோவை அவினாசி சாலையில் “கோர்ட்யார்டு” அடுக்குமாடி வீட்டுவசதி திட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள், சாலை மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. துவக்க விழா கோவையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தலைமைசெயல் அலுவலர் ஜி.சுதாகர குப்தா பேசுகையில் முதன் முதலாக இத்திட்டத்தை ரூபாய் 75 கோடி மதிப்பில், கோவையில் துவக்கி உள்ளதாகவும், அனைத்து விதமான வசதிகளை உள்ளடக்கிய இந்த “கோர்ட் யார்டு” குடியிருப்புகளை இரண்டு வகையாக பிரித்துள்ளதாகவும், கட்டுப்படியாகக்கூடிய விலையில் உருவாகும் தமிழ் நாட்டின் முதல் வீட்டுவசதித் திட்டம், PMAY இணக்கநிலை கொண்ட செயல்திட்டம், விலை ரூ.18-29.9 இலட்சத்துக்குள் மட்டுமே 1BHK & 2BHK அபார்ட்மெண்ட் -248 யூனிட்டுகள், சிறந்த சமூக உட்கட்டமைப்பு வசதி விளையாட்டு, நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம் மற்றும் பல செயல்திட்டத்தின் சிறப்பம்சமாகும். வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரில், சாதாரண மக்களும் பிரதம மந்திரி கடன் திட்டத்தில் வீடு வாங்கும் வசதியை எங்களது நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர். செயல்திட்டங்களை குறித்து பேசிய இயக்குனர்கள் சி.நாகராஜ், சுரேஷ் குமார் இத்தொழில்துறையில் 22 ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவுசெய்கின்றன. சிறப்பான வாழ்கை அனுபவத்திற்கான ஒரு அமைவிடமாக மட்டுமின்றி முதலீட்டுக்கான ஒரு வாய்பாகவும் “கோர்ட்யார்டு” திட்டம் இருக்கிறது என்று கூறினார்.