கோவை மத்திய சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அரசு பொருட்காட்சி துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்க துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழாவில் மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், கோவை மாவட்ட ஆட்சி தலைவர் த.நா.ஹரிஹரன், செய்தித்துறை இயக்குநர் பொ.சங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர். ஜி அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, எட்டிமடை ஏ.சண்முகம், வால்பாறை கஸ்தூரி வாசு, சூலூர் கனகராஜ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அரசுப் பொருட்காட்சியினை தொடங்கி வைத்து பார்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியில்
தமிழக முதல்வர் தலைமையில் அவருக்கு உறுதுணையாக துணை முதல்வர் சிறப்பாக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரசு பொருட்காட்சி துவக்கப்பட்டுள்ளது.
திமுக துரோகம் செய்துள்ளது. ஆனால் தொடர்ந்து ஸ்டாலின் ஆட்சியை கவிழ்த்து முதல்வராக காவிரி விவகாரத்தை எழுப்பி வருகிறார்.
மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் தமிழக அரசு சட்டப்போராட்டமும் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் மிகப்பெரிய துரோகம் செய்கிறது. ஆனால் காங்கிரசுடன் இணைந்து முத்தரசன் உள்ளிட்ட இடதுசாரிகளை சேர்ந்தவர்கள் போராடுவது வேதனை அளிக்கிறது.
எடப்பாடி அரசால் கண்டிப்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்.
யாரை திருப்தி செய்ய ராம் மோகன் ராவ் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியவில்லை. யாருமே மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இவரை விசாரிக்க வேண்டும்.
கோவைலிருந்து செய்தியாளர்
என். ருக்மணி