கோவை கொடிசியா
அரங்கத்தில் 76-வது அனைத்து இந்திய ஆப்தாமாலஜிக்கல் சொசைட்டி மாநாடு நடைபெறுகிறது.
இவ்விழாவிற்கு சிறப்புவிருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவரவ் கங்குலி கண் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து வைத்து துவங்கி வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் சவுரவ் கங்குலி பேசுகையில்
“நான் முதல்முறையாக கோவைக்கு வருகிறேன்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள்வெ தேர்வு கொள்கை மற்ற நாடுகளை விட சிறப்பாகவும் வெளிப்படையாக செயல்படுகிறது.
இந்த நகரம் மிகவும் தூய்மையாக உள்ளது. எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.
மேலும் கண் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் கண்ணை இழந்தால் நம்மால் 50 சதவீதம் ஒன்றும் செய்ய முடியாது அனைத்தையும் இழந்ததற்கு சமம், எனவே நாம் கண்ணை பாதுகாக்க வேண்டும்” என்றார்.