
தி இந்தியன் லக்சுரி எக்ஸ்போ நிறுவனம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவையில், முதல் ஆடம்பர கண்காட்சியினை நடத்தியது. பலத்த வரவேற்பை பெற்றதால், இந்த ஆண்டு மார்ச் துவங்கியது. கோவை கொடிசியா வளாகத்தில், 2வது முறையாக, பிரமாண்டமான முறையில், ஆடம்பர கண்காட்சியினை, உலக புகழ் பெற்ற, ஆடம்பர ப்ராண்டுகளுடன் இணைந்து நடத்தியது.
இதில் ஒரே கூரையின் கீழ், புகழ்பெற்ற ப்ராண்டுகள் தங்களின் நவீன பொருட்களை காட்சிப்படுத்தியது. இக்கண்காட்சி, 4 தேசிய அளவில் புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களின் ஆடை அலங்கார, இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த கண்காட்சியானது, மாறிவரும் பொருளாதார சூழல்கள், சந்தையின் தேவைகள் மற்றும் எங்கள் ஆதரவாளர்களின் வசதி முதலியனவும் மேலும், ஆடம்பர சந்தை படுத்துதலை, மையமாக கொண்டும் நடத்தப்படுகிறது.
இந்த நிகழ்வை வெற்றிகரமானதாக நிகழ்த்துவதற்கு, மிகுந்த பங்களிப்பை அளித்து வருகின்ற, மார்டின் குரூப் ஆப் நிறுவனத்தின் சார்லஸ் மார்டின், விஸ்வா மற்றும் தேவ்ஜி டைமண்ட்ஸ் விஸ்வநாதன், மகாவீர்ஸ் நிர்வாக இயக்குனர் அஜித் ஜெயின், சென்னிஸ் குழுமம் சிவராஜ் மற்றும் பங்குபெறும் நிறுவனங்களான பிஎம்டபள்யு, லெக்சஸ், மினி-கூப்பர், தியானி ஜுவெல்ஸ், ஆதி, சம்ரிதி உனிக்லைப்ஸ்பசெஸ், டியூகாட்டி, சினிபெல்ஸ், பிஎம்டபள்யு பைக்ஸ், சினிஸ்பா, ஜீப், சத்யாபால், எஸ்கேடிஎம், காக்ஸ் அண்ட் கிங்க்ஸ், ரிடோல் பென்ஸ், ரித்து குமார், கிபா ஸ்டுடியோ, மைகேல் கோர்ஸ், ரேய்மன்ட், காசா கிராண்டே ஆகிய நிறுவனங்கள், தங்களுடைய பங்களிப்பை அளித்து வருகிறது.
இது குறித்து தி இந்தியன் லக்சுரி எக்ஸ்போ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கரண் கூறுகையில்,
சூக் பாக்ஸ் என்டர்டேயின்மென்ட் நிறுவனத்தினரால் நடத்தப்படும் இந்த நிகழ்வு ஆடம்பரம் என்பதை கருவாக கொண்டு நடத்தப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவத்தை இந்நிகழ்வு ஏற்படுத்தும். மேலும், ஹைதராபாத், மும்பை, புனே, சண்டிகர் ஆகிய நகர மக்களின் ஆடம்பர தேவைகளை பூர்த்தி செய்த வருகிறது.
இக்கண்காட்சியில் சுமார் 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு இந்த கண்க்காட்சி மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையை இன்று எட்டி உள்ளது. மிகச்சிறந்த முறையில் தேர்தெடுக்கப்பட்டு நடத்தபடுவதால் இந்நிகழ்வின் பங்குதாரர்களுக்கு இந்த கண்காட்சி மிகச்சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. சிறந்த ஆலோசனை குழுவையும், தனிப்பட்ட முறையில் அழைக்கப்படும் வாடிக்கையாளர்கள் ஆகியோராலும் இந்த நிகழ்வு வியாபார பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கிறது. ஆடம்பர பிராண்டுகள் மக்களை சென்று அடைவதற்கு இந்த கண்காட்சி ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுக்கிறது.