March 31, 2023

சவரக்கத்தி’ திரைப்படத்திற்கு விழா எடுத்த ‘HILARITY INN

அறிமுக இயக்குனர் G.R. ஆதித்யன் இயக்கத்தில் உருவானது ’சவரக்கத்தி’. இத்திரைப்படம் மக்களாலும், பத்திரிக்கையாளர்களாலும் மற்றும் ஊடகங்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
 
இந்த படத்தில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். 
 
இப்படத்தினை பார்த்து, ரசித்த ‘HILARITY INN’ சேர்மன் திரு.குறிஞ்சி செல்வன்  மற்றும் அவரது பணியாளர்கள், படக்குழுவினர் அனைவரையும் அழைத்து அவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் கெளரவப்படுத்தும் விதமாகவும் விழா ஒன்றினை எடுக்க முடிவு செய்து, 
 
ே்ப்ரவரி 14 அன்று  இரவு சரியாக 9 மணியளவில் ‘HILARITY INN’ல் சவரக்கத்தி கலைஞர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விழா எடுத்தனர் 
 
இவ்விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *