கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் மற்றும் லோன் வுல்ஃப் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம், இயக்குனர் மிஸ்கின், பூர்ணா . ஆதேஷ் , அஸ்வத், மோகன் நடிப்பில் ,
மிஸ்கின் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்க, அவரது தம்பி ஜி ஆர் ஆதித்யா இயக்கி இருக்கும் படம் சவரக் கத்தி
வாயாலேயே வடை சுடும் ஒரு சவரத்தொழிலாளி. ஏன், ?எதற்கென்றே தெரியாமல் தும்மினால் கூட மூக்கையறுக்கும் அளவிற்குக் கோபம் கொள்கிற ஒரு “பரோல் கைதி” ரவுடி. சவரத்தொழிலாளி தன் மைத்துனரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கக் தன் நிறைமாத கர்ப்பிணி மற்றும் குழந்தைகளோடு புறப்பட, பரோல் முடிந்து 6 மணிக்கு சிறைக்குத் திரும்ப வேண்டும் என்கிற சூழலில் அந்த ரவுடி வெளியில் கொஞ்சம் சுற்றலாம் என புறப்பட.. இருவரும் எதிர்பாராத ஒரு சூழலில் சந்திக்கும்போது அது சண்டையாக மாற.. அங்கிருந்து ஆரம்பிக்கிறது “சவரக்கத்தி”யின் கதை.
ஒரு பக்கம் மிஷ்கின், இன்னொரு பக்கம் ராம் இருவரில் யாரை பார்ப்பது? இருவரையும் தாண்டி குண்டா, குட்டையா மிஷ்கின் அடியாளாக வரும் ஒருவர் Super நடிப்பு அட இவர்களை விடுங்கள்,
பூர்ணா.. “எய்யா சாமி, எங்கய்யா இருக்க?” என்று தம்பியிடம் போன் பேசுவதும், “அத்தான்” என்று ராமிடம் குழைவதுமாய் ஒரு நிறைமாத கர்ப்பிணியாக வருகிறாரே அவரைப் பார்ப்பதா?இப்படி ஆளாளுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்தனா்
பொதுவாக மனசுக்குள் இருப்பதை இயல்பில் யாரும் அப்படியே செய்வது இல்லை . ஆனால் மிஸ்கின் படக் கதாபாத்திரங்கள் மனசில் தோணுவதை அப்படியே உடல் மொழியால் செய்யும் . இந்தப் படத்திலும் அந்த அழகு , செயற்கை , யதார்த்தமின்மை எல்லாமும் இருக்கிறது . சிறப்புமிஷ்கினுக்கு தான் எந்த வகையிலும் சளைத்தவனல்ல என்று நி௹ப்பித்துள்ளாா். ராம். தங்க மீன்களில் பார்த்தேவிட. இதில் நடிப்பு super

அரோல் குரேலியின் இசை டைட்டில் கார்டு முதல் எண்டு கார்டு வரை நதியடி நீராய் சலனமில்லாமல் பயணித்து இதயம் நிறைகிறது. தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருக்கும் “அன்னாந்து பார்” பாடல் அழகோ அழகு. கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ஃபிரேமும் அற்ப்புதம் superஇயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா, மிஷ்கினின் வார்ப்பு. அப்படியே அவரைப் போலவே ரசனை கொண்டவராக இருக்கிறார். ஒவ்வொரு காட்சியமைப்பிலும், நடிகர்களைப்ப. யன்படுத்தியிருக்கிற தொணியிலும் அது அப்படியே தெரிகிறது. வாழ்த்துகள் இளம் மிஷ்கினே. சவரக்கத்தி” யாரையும் எந்த காயமும் செய்யாமல், உங்களை சிரிக்க வைக்கும்..சவரக்கத்தி”ரசிகர் கவ௹ம் சக்தி