September 24, 2023

சார்லி சாப்ளின்- 2 படத்தில் ”சின்ன மச்சான் செவத்த மச்சான் ..” பாடல்

சார்லி சாப்ளின்- 2 படத்தில் ”சின்ன மச்சான் செவத்த மச்சான் ..” பாடல்

பிரபல நாட்டுப் புற இசைப் பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜ லட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலை, 

பிரபுதேவா நிக்கி கல்ராணி நடிக்க அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கும்  சார்லி சாப்ளின் 2 படத்தில், 

இசை அமைப்பாளர் அம்ரேஷ் இசையில் பயன்படுத்தி இருக்கிறார்கள் .  இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது.

யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.

இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம்  பகிர்ந்து கொண்டனர், 

 தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் மற்றும் இயக்குனர் ஷக்திசிதம்பரம்.சந்திப்பில் டி.சிவா பேசும் போது, “இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமியால் பாடப்பட்ட போதே இது சூப்பர் ஹிட் ஆகும் என்று, 

அவர்களிடம் பேசி ரைட்ஸ் வாங்கி வைத்து விட்டேன். அதற்கு பிறகு தான் அந்த பாடலுக்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

அந்தப் பாடலை சார்லி சாப்ளின் 2 படத்திற்காக அம்ரீஷ் இசையில் உபயோகப் படுத்திக் கொண்டோம்.

இது தவிர அவர்களது இன்னொரு பாடலையும் வாங்கி வைத்துள்ளேன் ” என்றார் .

இயக்குனர் ஷக்திசிதம்பரம் தனது பேச்சில், ” செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்தப் பாடலை படத்தின் கதைக்கு ஏற்ப சில வரிகளை மாற்றி பயன்படுத்தி இருக்கிறோம் 

அம்ரீஷ் நல்ல இசை ஞானம் உள்ளவர். இன்று இந்த ஒரு பாடலே பட்டையை கிளப்பி இருக்கு எனும் போது, அடுத்து வருகிற பாடல்கள் எல்லாம் இன்னும் பட்டையை கிளப்பும்” என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசும் போது, ” இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சிவா சார், இயக்குனர் ஷக்திசிதம்பரம் சார் பிரபுதேவா சார் ஆகியோருக்கும், 

இந்த பாடலை ட்விட் மூலம் மேலும் பாப்புலராக்கிய திரு.தனுஷ் சாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரபு தேவா சார் எவ்வளவோ டியூனுக்கு வித விதமான டான்ஸ் ஆடி இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். சின்ன மச்சான் பாடல் மூலம் அவர் ஆடி நான் வெற்றி பெற்றிருக்கிறேன்.

எனக்கான ஒரு இடம் சினிமாவில் ராகவா லாரன்ஸ் சாரின்  மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலமாகவும்பிரபுதேவா சாரின் சார்லி சாப்ளின் 2 மூலமும் எனக்கு கிடைத்திருக்கிறது எனும் போது பெருமையாக இருக்கிறது.

மிகப் பெரிய இசையமைப்பாளர்கள் மத்தியில்  வளர்ந்து வரும் எனக்கும் ஒரு இருக்கை கிடைத்திருக்கிறது என்பது சந்தோஷமே.

அடுத்து சார்லி சாப்ளின் 2 படத்தில் இன்னும் 4 பாடல்கள் இருக்கு…அதுவும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும் என்று நம்பறேன்.

 சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் எல்லா சோசியல் மீடியாவிலும் முதல் இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் இருக்கு என்பது, 

எங்கள் குழுவினருக்கு கிடைத்த வெற்றி” என்றார்.   நிகழ்ச்சியில் சரிகம ஆடியோ நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் தியாகராஜன் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *