November 30, 2023

சினிமா நடிகனும் அரசியல்வாதியும்

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில்    சத்யராஜ் நடித்து  வெற்றி பெற்ற படம் “அடிதடி”.

மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி  ஒரு  படத்திற்காக இணைந்துள்ளது. 

சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர்    பிலிம்ஸ்  சார்பாக M.ஞானசுந்தரி தயாரிக்கின்றார். 
இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத,  திரைக்கதை அமைத்து   இயக்குகிறார் ஷிவ்ராஜ் 

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிய போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன,  நடக்கின்றன, நடக்கும் என்பதை, 

அரசியல் நையாண்டியுடன்நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க  கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”. 
தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும்  ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.

 சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ்  வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில்   தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *