சென்னை, நெசப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி.கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/27 என்பவரின் மகள் ராதா, வ/7 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த (25.3.2018) அன்று மதியம் ராதா தனது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடை உரிமையாளர் முகமது அலி, சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். சிறுமி ராதா அழுதுகொண்டே வந்து தனது தாய் கவிதாவிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளது. இது தொடர்பாக கவிதா அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஞடீஊளுடீ (ஞசடிவநஉவiடிn டீக ஊhடைனசநn கசடிஅ ளுநஒரயட டீககநnஉநள ஹஉவ -2012) சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அசோக்நகர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை செய்ததில், முகமது அலி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரியவந்தது. அதன்பேரில் முகமது அலி, வ/50, த/பெ.அனிபா, எண்.11/7, அண்ணா தெரு, பாரதிநகர், நெசப்பாக்கம் என்பவரை நேற்று (28.03.2018) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட முகமது அலி விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.