September 25, 2023

சிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை” புதிய பரிமாணத்தில் வருகிறது!

சிவாஜிகணேசன் – வாணிஸ்ரீ நடித்த “வசந்த மாளிகை” புதிய பரிமாணத்தில் வருகிறது!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஜோடியாக நடித்த காலத்தால் அழியாத காதல் காவியம் ” வசந்த மாளிகை” திரைப்படம். பாலாஜி, சி. ஐ. டி. சகுந்தலா, ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

அன்றைய கால கட்டத்தில் கலரில் வந்து வெள்ளி விழா கொண்டாடிய படமிது.இதில் கே. வி. மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய,

“மயக்கம் என்ன” —-“கலைமகள் கைபொருளே”—-“இரண்டு மனம் வேண்டும்”–“ஏன் ஏன் ஏன் “

ஆகிய பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இந்த படத்தை அன்று டி. ராமாநாயுடு தயாரிக்க பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார்.இப்படம் வி. சி. குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது.இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *