June 26, 2022

,சி வி குமாரின் ‘தொரட்டி’ :

இயக்குனர் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டைன்மென்ட் வழங்க, ஷமன் பிக்சர்ஸ் சார்பில்  ஷமன் மித்ரு தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, 

சத்யகலா , அழகு, வெண்ணிலா கபடி குழு ஜானகி, ஆடுகளம் ஸ்டெல்லா, குமணன் , முத்துராமன் நடிப்பில் ,  மாரி முத்து இயக்கி இருக்கும் படம் தொரட்டி . 
 
கிராமிய மணத்தின் பின்னணியில் கிராமிய மனங்களின் வாழ்வியலை சொல்லும் இந்தப் படத்தை பார்த்து நெகிழ்ந்து போன சி வி குமார் படத்தை வாங்கி வெளியிடுகிறார் . 
“ரொம்ப நல்ல படம் சார் . இது மாதிரி படங்கள் வரணும் . என்னை வளர்த்து விட்ட சினிமாவுக்கு நான் செய்யும் நன்றிக்கடன் இது ” என்கிறார்  சி வி குமார் நெகிழ்வாக . 
 
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அனைவரும் கிராமிய மங்கல நிகழ்ச்சிக்கு வருபவர்கள் போல ,
 
அன்புடன் சம்பிரதாய முறைப்படி தானியம் வைத்து வரவேற்கப்பட்டனர் . அனைவருக்கும் கிராமிய முறையில் பானகம் தரப்பட்டது . 
 
சிறப்பு விருந்தினர்களுக்கு தலைப்பாகை கட்டப்பட்டது . 
 
மேடையில் தொரட்டி வைக்கப்பட்ட மாலை மரியாதை செய்யப்பட்டது . 
 
 
நிகழ்ச்சியில் இயக்குனர்கள் சீனு ராம சாமி, முன்டாசுப்பட்டி ராம் , பேரரசு, ரவிக்குமார், நலன் குமாரசாமி ,
 
கேபிள் ஷங்கர், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா , பி எல் தேனப்பன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர் . 
 
படம் மிக வித்தியாசமாக இருக்கும் என்பது நிகழ்ச்சியிலேயே தெரிந்தது 
 
மக்கள் மனங்களை கொய்யட்டும் தொரட்டி !
 

மண் மனம் கமழும் முழுமையான புகைப்பட. கீழே 

IMG_5258

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *