கோவை காந்திபுரம் நியூ சித்தாபுதுாரில் உள்ள சுதா மருத்தவமனையில் மாபெரும் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இவ்முகாமை முதன்மை செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர். தனபாக்கியம் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு குழந்தையின்மை மற்றும் செயற்கைக் கருத்தரித்தல் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ ஆலோசனை, ஸ்கேன் மற்றும் இரத்தம், விந்து பரிசோதனைகள் அனைத்து குறைபாடுகளை கண்டு சிகிச்சைகளுக்கான இலவச முகாமில் ரூ 5000 மதிப்புள்ள பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக பார்க்கபட்டன.
முகாமில் டாக்டர். எஸ்.தனபாக்கியம் அவர்கள் தலைமையில் உடன் டாக்டர்.கவிதா, டாக்டர். வித்யாலட்சுமி மருத்துவர் பங்கேற்று தம்பதியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.
இந்த முகாமில் ஏராளமான தம்பதிகள் உள்ளுர், வெளியூர்களிலிருந்து வந்து முகாமில் பங்கேற்ற பயன் அடைந்தனர்.
இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். எஸ்.தனபாக்கியம் கூறுகையில்,
“சுதா டெஸ்ட்டியூப் பேபி மையம் கடந்த 28 ஆண்டுகளாக ஈரோட்டிலும், 7 ஆண்டுகளாக கோவையில் செயல்பட்டு வருகிறது.
இதில் ஈரோடு மருத்துவமனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெஸ்ட்டியூப் குழந்தைகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளோம்.
கோவையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சோதனைக் குழாய் குழந்தைகளை உருவாக்கியுள்ளோம்.
இதன் தொடர்ச்சியாக உலகப் புகழ் பெற்ற இம்ஸி எனப்படும் அதிநவீன டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை முறை சுதா டெஸ்ட்டியூப் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த இம்ஸி சிகிச்சை முறையில் இலங்கை, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், கென்யா, நைஜீரியா, கனடா போன்ற பல நாடுகளில் இருந்து குழந்தையில்லா பல தம்பதிகள்,இங்கு வந்து சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்