September 30, 2023

சூரிய மின் சக்தி மற்றும் காவல் ஆளிநர்களுக்கான மருத்துவ முகாமை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப.,அவர்கள் இன்று (24.3.2018) காலை, ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கலந்தாய்வுக் கூடத்தை திறந்து வைத்தார். சுமார் 50 பேர் அமரும் வசதியுடைய இந்த கலந்தாய்வுக் கூடத்தில் காவல்துறை தொடர்பான கலந்தாய்வுகள், சந்திப்புகள் நடத்துவதற்கு வசதியாக கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்-1 மாம்பலம் காவல் நிலைய மேற்தளத்தில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு, சூரிய சக்தியை சேகரித்து மின்சக்தியாக பயன்படுத்தும் வசதியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த சூரிய தகடுகள் மூலம் 3 மு.ஏ. மின்சக்தியை 2 மாதத்திற்கு 900 யூனிட் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இதனால் காவல் நிலையத்தின் மின் கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைவதுடன், மின்தடையின்போதும் தடையின்றி பணிபுரியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் பயன்பெறும் வகையில் காவல் ஆளிநர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், தெற்கு கூடுதல் ஆணையாளர் திரு.எம்.சி.சாரங்கன்,இ.கா.ப., தெற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.சி.மகேஷ்வரி,இ.கா.ப., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் திரு.என்.குமார், தி.நகர் சரக காவல் உதவி ஆணையாளர் திரு.செல்வம் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *