சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், பணியின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தடுத்து, மன அழுத்தத்தை குறைப்பதற்கும் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் திருஅ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், காவல் ஆளிநர்களுக்கு இன்று (24.3.2018) யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.
அதன்பேரில், இன்று சென்னையில், 1.எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் (திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் மற்றும் ஆயுதப்படை), 2.பாரதி மகளிர் கல்லூரி (பூக்கடை காவல் மாவட்டம்), 3.ராயபுரம் புனித பீட்டர் பள்ளி (வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்), 4.புழல் மைதானம் (மாதவரம் காவல் மாவட்டம்), 5.திரு.வி.க.நகர் மாநகராட்சி மைதானம் (புளியந்தோப்பு காவல் மாவட்டம்) 6.கந்தசாமி நாயுடு கல்லூரி (அண்ணாநகர் காவல் மாவட்டம்), 7. ஹஐநுஆஹ கட்டிடம், அம்பத்தூர் (அம்பத்தூர் காவல் மாவட்டம்), 8.காமதேனு கல்யாண மண்டபம் (மயிலாப்பூர் காவல் மாவட்டம்), 9. வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி மைதானம் (கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டம்) 10.புனித மைக்கேல் மைதானம் (அடையாறு காவல் மாவட்டம்), 11.மீனாட்சி கல்லூரி (தி.நகர் காவல் மாவட்டம்), 12.புனித தோமையர் மலை ஆயுதப்படை மைதானம் (புனித தோமையர் மலை மாவட்டம்), 13.தலைமைச் செயலகம் எதிரிலுள்ள மைதானம் (போக்குவரத்து காவல் ஆளிநர்கள்), 14.புனித ஜார்ஜ் பள்ளி, கீழ்ப்பாக்கம் (மத்திய குற்றப்பிரிவினர்) ஆகிய 14 இடங்களில் இன்று (24.3.2018) காலை, காவல் ஆளிநர்களுக்கு யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் காவல் ஆளிநர்களுக்கு சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, தியானம் மற்றும் பல யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டது.
இன்று (24.3.2018) காலை புதுப்பேட்டை ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகாசன வகுப்பை, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் பார்வையிட்டு, காவல் ஆளிநர்கள் தொடர்ந்து யோகாசன பயிற்சிகள் மேற்கொண்டு, தங்களது உடலையும் மனதையும் பாதுகாக்க வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.எச்.எம்.ஜெயராம்,இ.கா.ப., (வடக்கு), திரு.எம்.சி.சாரங்கன்,இ.கா.ப., (தெற்கு), இணை ஆணையாளர்கள் திரு.டி.எஸ்.அன்பு, இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திரு.நஜ்மல் ஹோடா,இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), திரு.ஏ.ஜி.பாபு,இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திருமதி.ஏ.ஜெயலஷ்மி (நிர்வாகம்), திருமதி.எஸ்.விமலா (நுண்ணறிவுப்பிரிவு), திரு.கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 2,500 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர். மேலும், சென்னை முழுவதும் நடைபெற்ற யோகாசன வகுப்பில் சுமார் 10,000 காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.