May 31, 2023

ஜாக்கி ஷெராப் நடிப்பில் கஸ்தூரி ராஜா இயக்கம் ‘பாண்டி முனி ‘

தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 படங்களை தயாரித்த, 

ஆர்.கே.புரொடக்ஷன் தற்போது தயாரிக்க, 

பிரபல ஹிந்தி நடிகர் ஜாக்கிஷெராப் முனி என்கிற அகோரி  வேடத்தில் நடிக்க, 

 புதுமுக நடிகையான மேகாலி  பாண்டி என்ற வேடத்திலும் நடிக்க, 

இன்னொரு நாயகியாக நிக்கிஷாபட்டேல், பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் நடிக்க, 

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கஸ்தூரிராஜா இயக்கும் படம்   “ பாண்டி முனி “     ஒளிப்பதிவு   –  மது அம்பாட்   

இசை  –  ஸ்ரீகாந்த் தேவா

கலை   –  ஸ்ரீமான் பாலாஜி

நடனம் –  சிவசங்கர்

ஸ்டன்ட்  –  சூப்பர் சுப்பராயன்.எடிட்டிங்  –  சுரேஷ்அர்ஸ்

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் கஸ்தூரி ராஜா, ”  இது வித்தியாசமான படம்.

இதுவரை கிராம வாழ்வியலையும் காதலையும் குடும்ப உறவுகளையும் மட்டும் பதிவு செய்த நான் இதில் ஹாரர் விஷயத்தை கையிலெடுக்கிறேன்.

சாமிக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர் தான் பாண்டி முனி

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் ஒரு ஜமீன் பங்களாவுக்குள் நடக்கும் ஹாரர் படம் இது. சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நடப்பது மாதிரியான பீரியட் படம் இது.சாமி பாதி,  பேய் பாதி என்று  கதையின் போக்கு இருக்கும்.

இந்த கதையை கேட்டவுடன் ஜாக்கி ஷெராப் ஆர்வத்துடன் உடனே ஓகே சொன்னது இந்த கதைக்கு கிடைத்த முதல் வெற்றி.

படத்தின் படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, குரங்கணி, ஜவ்வாதுமலை போன்ற இடங்களில் நடைபெற உள்ளது

இது நான் இயக்கும் 23 வது படம்.

ஆனால் இப்போது உணர்வு ரீதியாக இதுதான் நான் இயக்கும் முதல் படம் ” என்றார் . நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த ஜாக்கி ஷெராப் , ” எனது இந்திப் படங்களை நூறு நாள் ஓட்டும் அளவுக்கு, 

தமிழ்நாடு என்னை  தனது பிள்ளையாக ஏற்றுக் கொண்டது . அந்த நன்றி எனக்குள் எப்போதும் உண்டு . 

ஆரண்ய காண்டம், மாயவன் படங்களுக்குப் பிறகு நான்  நடிக்கும் மூன்றாவது தமிழ்ப் படம் இது .  மிக வித்தியாசமான கதாபாத்திரம் . வித்தியாசமான படங்களை தரும் படைப்பாளிகள் இங்கு நிறைய  உண்டு . 

மேலும் நிறைய தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ” என்றார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *