
இந்த நிகழ்ச்சியில் பொன்விழா மலரை வெளியிட பின்னணி பாடகர். நித்யஸ்ரீ மகாதேவன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியது,
உலகமயமாதல் காரணமாக பெட்ரோலிய பொருட்கள், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் உலக வெப்பமயமாதல் இன்றைக்கு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
ஆதலால்,மாணவர்கள் அனைவரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்த உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்
பள்ளிகளில் வரலாறு, கணிதம்,புவியியல் பாடங்களை கற்பிப்பதுடன் மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிகளையும் வழங்க வேண்டும் என்று கூறினார்.
பொன்விழா கொண்டாடும் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு எப்போது வேண்டுமானாலும் ராஜ்பவனில் தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சியில், முன்னால் தலைமை நீதிபதி. பி.ஆர்.கோகுலகிருஷ்ணன்,
சென்னாபுரி அன்னதான சமாஜம் அமைப்பின் நிர்வாகிகள். நீதிபதி.பி.பாஸ்கரன், நீதிபதி.டி.ஹரிபரந்தாமன், வி.லோகநாதன், வி.ஆர்.உதயசங்கர், தலைமை ஆசிரியர்கள். எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.ஹெச்.எல்ஸி, மற்றும் அமைப்பு நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.