கோவையில்
டி.டி.வி.தினகரன் அணிக்கு “குக்கர்” சின்னத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு நீதிபதி ரேகா தீர்ப்பளித்தார்.
டி.டி.வி.தினகரனுக்கு ஒதுக்கீடு செய்யவும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு “குக்கர்” சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தனது அணிக்கு அதிமுக அம்மா அணி என்ற பெயரை பயன்படுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை கொண்டாடும் விதமாக கோவையில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் நீதிமன்றம் வளாகம் முன்பாக டி.டி.வி.தினகரன் அணி கழக வழக்குரைஞர் பிரிவு தலைவர் நித்தியானந்தா, வெங்கடேஷ் தலைமையில் இனிப்புகள் வழங்கினார்.
வழக்கறிஞர்கள் வெங்கட பெருமாள், சிவசாமி தமிழன், விஜயகுமார், செந்தட்டி பாண்டியன், முகமது முஸ்தபா, முத்து, ராமபாண்டியன், மகேஸ்வரன், ஆறுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு தலைவர், மத்திய அரசின் சதியை முறியடித்து மீண்டும் சின்னததை பெற்ற டி.டி.வி.தினகரன் தமிழகத்தில் வரும் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை பெறுவார் என தெரிவித்தார்.
கோவைலிருந்து செய்தியாளர் என். ருக்மணி