June 1, 2023

ட்ராவல் எக்ஸ்பி, இங்கிலாந்தின் பிரதான சந்தையில் ப்ரீவியூ ப்ளாட்ஃபார்ம் மூலம் களமிறங்குகிறது! இதன் மூலம் உலகளவில் 91 மில்லியன் இல்லங்களைச் சென்றடையும்

ட்ராவல் எக்ஸ்பி, இங்கிலாந்தின் பிரதான சந்தையில் ப்ரீவியூ ப்ளாட்ஃபார்ம் மூலம் களமிறங்குகிறது! இதன் மூலம் உலகளவில் 91 மில்லியன் இல்லங்களைச் சென்றடையும்!!

· உலகின் முன்னணி பயண தொலைக்காட்சியான ட்ராவல் எக்ஸ்பி, ஏப்ரல் 30- ம் தேதி திங்கட்கிழமை 2018 அன்று இங்கிலாந்தின் ப்ரீவியூ ப்ளாட்ஃபார்மில் [சேனல் எண் 98] அறிமுகமாகிறது. இனி இங்கிலாந்தில் 16 மில்லியன் ப்ரீவியூ இல்லங்களைச் சென்றடையும். · ட்ராவல் எக்ஸ்பி, இங்கிலாந்தின் பிரதான வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் முதல் இந்திய தொலைக்காட்சி ஆகும்.
· ட்ராவல் எக்ஸ்பி இங்கிலாந்தில் செயல்படும் தனது தயாரிப்பு அலுவலகம் மூலமாக, இங்கிலாந்தின் உள்ளுர் மக்களுக்கேற்ற நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கவிருக்கிறது. முக்கிய இடங்கள், உணவு, கலாச்சாரம், இயற்கை, பாரம்பரியம், வாழ்க்கைமுறை அ உள்ளிட்ட இன்னும் பல அம்சங்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்பும்.
· இந்தியாவில், உலகின் முதல் தமிழ் பயணம் மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சியை ’ட்ராவல் எக்ஸ்பி தமிழ்’ என்ற பெயரில் ஒளிப்பரப்பி வருகிறது.
சென்னை, 26 ஏப்ரல் 2018 – ட்ராவல் எக்ஸ்பி, உலகின் முன்னணி பயணத் தொலைக்காட்சி 75 மில்லியனுக்கும் அதிகமான இல்லங்களைச் சென்றடையும் பிரபல தொலைக்காட்சியாகும். வெகுஜன மக்களுக்கான பல்வேறு கலாச்சாரத்தின் அடிப்படையிலான பயண நிகழ்ச்சிகளை அளிப்பதில் முன்னணி வகிக்கிறது. தற்போது ட்ராவல் எக்ஸ்பி மற்றுமொரு முக்கிய சர்வதேச சந்தையில் நுழைகிறது. ட்ராவல் எக்ஸ்பி-யின் தலைமைச் செயல் அதிகாரி பிரஷாந்த் சோதானி [Mr Prashant Chothani, CEO – Travelxp] கூறுகையில், “ஏப்ரல் 30-ம் தேதி திங்கட்கிழமை 2018 அன்று, இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான ‘டிஜிட்டல் டெரெஸ்ட்ரியல் டெக்னாலஜி’ அடிப்படையிலான ’ப்ரீவியூ’ ப்ளாட்ஃபார்ம் மூலம், ட்ராவல் எக்ஸ்பி, இங்கிலாந்தின் பிரதான சந்தையில் அறிமுகமாவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
‘ப்ரீவியூ’ ப்ளாட்ஃபார்ம், இங்கிலாந்தில் தனக்கென மிகப்பெரும் பார்வையாளர்கள் பகிர்வைப் [viewership] பெற்றுள்ளது. எங்களது தொலைக்காட்சியின் பயண தொடர்பான ப்ரீமியம் நிகழ்ச்சிகள், பொழுதுபோக்குடன் தகவல்களை வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும், இங்கிலாந்து முழுவதிலும் பரவலாக இருக்கும் 16 மில்லியன் ‘ப்ரீவியூ’ சந்தாதாரர்களைச் சென்றடையும் என உறுதியாக நம்புகிறோம். ‘ப்ரீவியூ’ ப்ளாட்ஃபார்முடன் கைக்கோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்கிலாந்தில் இருக்கும் பிரதான ரசிகர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் முதல் இந்திய தொலைக்காட்சி என்ற பெருமையை ட்ராவல் எக்ஸ்பி பெறுவதற்கு, எங்களுக்கு இடையேயான இந்த கூட்டு ஒப்பந்தம் பெரிதும் உதவும். மேலும் இந்த ஒப்பந்தம் நீண்ட கால நீடிக்கும், பரஸ்பர பலன்களை வழங்கும் ஒப்பந்தமாக இருக்குமென எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.


’ப்ரீவியூ’ ப்ளாட்ஃபார்மில் ’ட்ராவல் எக்ஸ்பி’ பயணத் தொலைக்காட்சி அறிமுகமாவதால், இங்கிலாந்தின் 99% இல்லங்களைச் சென்றடையும். இதனால் சர்வதேச அளவில் ஏற்கனவே 75 மில்லியன் இல்லங்களைச் சென்றடையும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சிக்கு கூடுதலாக 16 மில்லியன் இல்லங்களைச் சென்றடையும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இங்கிலாந்தில் 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் தயாரிக்கப்படும் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ‘ப்ரீவியூ ட்யூனர்’ தயாரிப்பின் போதே இணைக்கப்பட்டு வருகிறது. இதனால் ப்ரீவியூ ப்ளாட்ஃபார்மின் அனைத்து தொலைக்காட்சிகளையும் இங்கிலாந்தில் பார்க்க முடியும். பிபிசி, ஐடிவி, சேனல் 4, ஸ்கை மற்றும் ட்ரான்ஸ்மீட்டர் ஆபரேட்டர் அர்கிவா [BBC, ITV, Channel 4, Sky and transmitter operator Arqiva.] ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக திகழும் டிடிவி சர்வீசஸ் லிமிடெட், [DTV Services Ltd], ப்ரீவியூவை இயக்கி வருகிறது.
இங்கிலாந்தில் இருக்கும் பார்வையாளர்களுக்காக, ட்ராவல் எக்ஸ்பி ப்ரத்யேகமான உள்ளூர் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கும். இதற்கான பணிகளை ட்ராவல் எக்ஸ்பி-ன் நிர்வாக இயக்குநர், ஐரோப்பா திரு. சுமந்த் பஹல் மேற்கொள்வார். இவர் க்ரேட்டர் லண்டனில் இருக்கும் அலுவலகத்தில்
இருந்தபடியே ட்ராவல் எக்ஸ்பி யூகே தொலைக்காட்சியை வழிநடத்துவார்.
திரு. பஹல் கூறுகையில், “பிரதான பார்வையாளர்களுக்கான எங்களது அணுகுமுறை மிகவும் பிரபலம். புலம்பெயர்ந்த மக்களுக்காக மட்டும் கவனம் செலுத்தினால் அது எங்களை ஒரு வரம்பிற்குள் கட்டுப்படுத்திவிடும்.. அதன் தாக்கமும் குறைவாகவே இருக்கும். அதனால் ஒட்டுமொத்த பிரதான வாடிக்கையாளர்களை, வெகுஜன முறையில் சென்றடையும் வகையில்
எங்களது அணுகுமுறை இருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் பார்வையாளர்களுக்கு, எங்களது மாபெரும் லைப்ரரியில் இருக்கும் அசத்தலான 1,000 மணிநேரத்திற்கும் மேற்பட்ட உலகத்தரத்திலான படைப்புகளை அளிப்பதோடு, அவர்களை மனதளவில் விரும்பி பார்க்க தூண்டும் உள்ளூர், உள்நாட்டைச் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ப்ரத்யேகமாக தயாரித்து
வழங்கவிருக்கிறோம். இந்நிகழ்ச்சிகள் முக்கியமான இடங்கள், உணவு, கலாச்சாரம், இயற்கை, பாரம்பரியம், வாழ்க்கை முறை உள்ளிட்ட இதர அம்சங்களையும் பயணம் மூலமான பார்வையில் வழங்கும். அதிகரித்து வரும் இங்கிலாந்து பார்வையாளர்களின் எதிர்பார்புகளுக்கேற்ற வகையில் தயாரிக்கப்படும் உள்ளூர் நிகழ்ச்சிகள் அனைத்துதரப்பு ர்வையாளர்களையும்
சென்றடையும். அதேபோல் எங்களது லைப்ரரிக்கும் அதிகளவிலான நிகழ்ச்சிகள் கிடைக்கும்.’’ என்றார்.
இங்கிலாந்து சந்தைப்படுத்தல் திட்டம் பயணம் தொடர்பான மாறுபட்ட மற்றும் அழகான நிகழ்ச்சிகளுக்கென, இங்கிலாந்தில் அதிகளவில் இருக்கும் பிரதான பார்வையாளர்களை இலக்காக கொண்டு அசத்தலான சந்தைப்படுத்துதல் திட்டங்களை செயல்படுத்த ட்ராவல் எக்ஸ்பி திட்டமிட்டு இருக்கிறது. வெகுஜன தொலைக்காட்சிகளில் விளம்பர பிரச்சாரங்கள், இங்கிலாந்து முழுவதில் ஓடும் பேருந்துகளில் டிஜிட்டல் பில்போர்ட்கள், அண்டர்க்ரவுண்ட் பகுதிகளில் பில்போர்ட்கள், சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் உள்ளிட்ட இன்னும்பல சந்தைப்படுத்துதல் வியூகங்களை செயல்படுத்துகிறது ட்ராவல் எக்ஸ்பி. உலகின் மிகப்பெரும் பயண நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள் ஈடுஇணையில்லாத பயணம் தொடர்பான கருத்தாக்க நிகழ்ச்சிகள், அசத்தலான ஒளிப்பரப்பு தரம் என பிரதான இடத்தில் இருக்கும் ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியை சிஎம்டி மற்றும் சிஇஒ பிரஷாந்த சோதானி தலைமையேற்று வழிநடத்துகிறார். நிகழ்ச்சிகள் கருத்தாக்கம் பிரிவை தலைமை ஏற்று நடத்திவருகிறார் இயக்குநர் நிஷா சோதானி. ஊடகத்துறையில் இவர்களின் ஒட்டுமொத்த அனுபவம் 55 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மேலான அனுபவம், 2011-ல் ஆரம்பித்த ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சியை ஏழே வருடங்களில் உலகின் முன்னணி பயண தொலைக்காட்சியாக வர உதவி செய்திருக்கிறது.
ட்ராவல் எக்ஸ்பி தொலைக்காட்சி, இங்கிலீஷ், ஜெர்மன், செக், ஸ்லோவேனியன், செர்பியன், குரோஷியன் மற்றும் பல்கேரியன் என பல்வேறு நாடுகளின் உள்ளூர் மொழிகளிலும் அசத்தலான பயண நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இன்னும் பல நாடுகளின் உள்ளூர் மொழிகளில் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கின்றன. இந்தியாவில் ட்ராவல் எக்ஸ்பி, தமிழ், ஹிந்தி
மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பயணம் தொடர்பான கருத்தாக்க நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இனி வரும் காலத்தில் இன்னும் அதிக இந்திய மொழிகளில் தனது பயண நிகழ்ச்சிகளை அளிக்கவிருக்கிறது.
உலகத்தரத்தில் பயண கருத்தாக்க நிகழ்ச்சிகளை வழங்கவேண்டும் என்பதில் ட்ராவல் எக்ஸ்பி உறுதியாக இருக்கிறது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய முழுமையான ’இன் ஹவுஸ்’ உள்கட்டமைப்பு, மிக உயர் தரத்திலான உபகரணங்கள், அட்டகாசமான ட்ராவல் எக்ஸ்பி தயாரிப்பு குழுவினர் வழங்கும் ஈடுஇணையற்ற சர்வதேச தரத்திலான பயண கருத்தாக்க நிகழ்ச்சிகள் என ட்ராவல் எக்ஸ்பி மிகச்சிறந்த பயண தொலைக்காட்சியாக பிரதான இடத்தில் இருக்கிறது. கடந்த வாரத்தில், ‘தாலி-தே க்ரேட் இந்தியன் மீல்’ [Thali–The Great Indian
Meal] மற்றும் ‘சிட்டி ப்ரேக்ஸ் உஸ்பெகிஸ்தான்’ [City Breaks’ Uzbekistan] என இரு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த இரு நிகழ்ச்சிகளும் 3 இந்திய மொழிகளிலும், 7 சர்வதேச மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகின்றன. 4கே ஹெச்டிஆர் தொழில்நுட்பத்திலும் [4K HDR technology] உலகளாவிய பிரதான தொலைக்காட்சியாக ட்ராவல் எக்ஸ்பி முன்னணியில் இருக்கிறது.
இத்தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் சர்வதேச பார்வையாளர்களைக் கவரவேண்டுமென்பதால், நிகழ்ச்சிகள் ட்ராவல் எக்ஸ்பி- யினாலேயே சொந்தமாக அதிக மெனக்கெடலுடன் தயாரிக்கப்படுகின்றன. ’’ப்ரீவியூ ப்ளாட்ஃபார்ம் மூலமாக, இந்திலாந்தில் ட்ராவல் எக்ஸ்பி பயணம் மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சி அறிமுகமாவது, எங்களது பயணத்தின் அடுத்த ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். இந்த முயற்சி பயணங்களின் மீது காதல் கொண்டவர்களுக்கும், அருமையான வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கும் இனிமையான அனுபவமாக இருக்கும். எங்களது நிகழ்ச்சிகளின் மூலம் அவர்கள் வெளிவந்து, அழகான இந்த உலகத்தை நேரடியாக கண்டு ரசிக்க ஊக்குவிக்க உதவும்’’ என்றார் திரு. சோதானி.
ப்ரீவியூ நெட்வொர்க்கில் ட்ராவல் எக்ஸ்பி வழங்கும் அசத்தலான நிகழ்ச்சிகள் இடங்கள், வாழ்க்கை முறை, உணவு, கலாச்சாரம், இயற்கை மற்றும் பாரம்பரியம் என 6 முக்கிய பிரிவுகளில் ட்ராவல் எக்ஸ்பி வழங்கும் நிகழ்ச்சிகளை இனி இங்கிலாந்தில் ப்ரீவியூ நெட்வொர்க்கில் கண்டு ரசிக்க முடியும்.
இடங்கள்- இடங்கள் பிரிவு நிகழ்ச்சிகளில் ‘பேக் பேக்’, ‘ஆஃப் த க்ரிட்’, ‘க்ளிம்ஸஸ்’, ‘எக்ஸ்ப்ளோர் வேர்ல்ட்’, ‘எக்ஸ்ப்ளோர் இந்தியா’, ‘எக்ஸ்பி கைட்’, ‘சிட்டி ப்ரேக்ஸ்’, ‘நார்டிக் குவெஸ்ட்’, ‘சம்மர் எஸ்கேப்ஸ்’ மற்றும் நேபாளம் குறித்து விசேஷ சீரிஸ் ‘ஹோப் நெவர் டைஸ்’ [Backpack, Off The Grid, Glimpses, Xplore World, Xplore India, XP Guide, City Breaks, Nordic Quest, Summer Escapes and special series on Nepal – Hope Never Dies.] ஆகிய பிரபலமான தொடர்களில் இருந்து இடங்கள் தொடர்பான எபிசோட்கள் ஒளிப்பரப்பாகும்.
வாழ்க்கை முறை – வாழ்க்கை முறை பிரிவு நிகழ்ச்சிகளில், ‘அன்விண்ட்’, ‘ப்ளிஸ்’, ‘வேர்ல்ட் ஸ்பாஸ்’, ‘க்ரேட் வேர்ல்ட் ஹோட்டல்ஸ்’, ‘க்ரேட் இந்தியன் ஹோட்டல்ஸ்’, ‘பெஸ்ட் ஃப்ரம் த ரெஸ்ட்’, ‘க்ரூஸ் எக்ஸ்பி’, ‘ட்ராக்கிங் ராயல்டி’ [Unwind, Bliss, World Spas, Great World Hotels, Great Indian Hotels, Best From The Rest, Cruise XP, Tracking Royalty] மற்றும் இன்னும் பல தொடர்களின் எபிசோட்கள் இடம்பெறுகின்றன.
உணவு – உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச குஷ்சைன்ஸ், டிஷ், ப்ரத்யேக சுவையுள்ள உணவுகள் ஆகியவற்றைப்பற்றிய ‘ஸ்ட்ரிக்ட்லி ஸ்ட்ரீட் சீசன்ஸ் 1 மற்றும் 2’, ‘ஃபுட் பேக்ட் ஃபன்’, ‘’ஃபுட் ஹைவே’, ‘குவெஸ்ட்’ மற்றும் ‘ஃபுட்டிக்டட்’ [Strictly Street seasons 1 and 2, Food Fact Fun, Food Highway, Quest and Foodicted] போன்ற ட்ராவல் எக்ஸ்பியின் பிரபலமான ஷோக்கள் இப்பிரிவில் ஒளிப்பரப்பாகும்.
கலாச்சாரம்- கலாச்சாரம் பிரிவில் ’டிவைன் டெஸ்டினேஷன்ஸ்’, ‘வேர்ல்ட் ஃபெஸ்டிவல்ஸ்’, ’ஸ்பெஷல் மவுண்ட் கைலாஷ் சீரிஸ், [Divine Destinations, World Festivals, The Special Mount Kailash Series] போன்ற பிரபல கலாச்ச்சார அடிப்படையிலான தொடர்கள் மற்றும் ’ஹம்பிளி ஃபெஸ்டிவல்’, ’டிசெர்ட் சன்செட்’, ‘ரான்ன் உத்சவ்’, ‘ஸ்பிரிங் ஃபன்’, ஃபேர் @ புஷ்கர் [Hornbill Festival, Desert Sunset, Rann Utsav, Fair@Pushkar, Spring Fun] போன்ற கலாச்சாரம் சார்ந்த ப்ரத்யேக தொடர்களை ட்ராவல் எக்ஸ்பி வழங்கும்.
இயற்கை – இயற்கை சார்ந்த தகவல்களுடன் கூடிய இப்பிரிவில், ‘படா வீகெண்ட்’ ‘ஹில்ஸ் & வேலிஸ்’ போன்ற பிரபல எபிசோட்கள் இடம்பெறுகின்றன.
பாரம்பரியம் – பாரம்பரியப் பிரிவில் ’வேர்ல்ட் ஹெரிடேஜ்’, ’லேண்ட் மார்க்ஸ்’ உள்ளிட்ட பலவற்றைப் போன்ற நேர்த்தியான தொடரிலிருந்து எபிசோட்கள் அடங்கும்.
டிராவல் எக்ஸ்பி பற்றி….:
செலிப்ரிட்டீஸ் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் டிராவல் எக்ஸ்பி. ஊடகம், ஒளிபரப்பு, விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இது சேவைகளை வழங்கி வருகிறது. 10 சேட்டிலைட் சேனல்களை உலகம் முழுவதும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது. உலகின் முன்னணி பயண சேனலான இது 4 கே தொழில் நுட்பத்தில் வழங்கப்படுகிறது.
எஸ்இஎஸ் மற்றும் யூட்டல் சேட் நிறுவனங்களுடன் இணைந்து வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உலகிலேயே முதல் முறையாக 4 கே ஹெச்டி ஆர் தொழில்நுட்பத்தில் இந்த சேனல் வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.travelxp.tv ட்ராவல் எக்ஸ்பி தமிழ்- உலகின் முதல் பயணம் மற்றும் வாழ்க்கை முறை தொலைக்காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *