
சென்னை, மார்ச் 8, 2018 :மணப்பெண்ணை தேடி அறிவதற்கான எங்க வீட்டு மாப்பிள்ளையின் இந்த வார நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்ற இளம்பெண்களின் மனம்கவர்ந்த,திருமணமாகாத தகுதியான மணமகனாக அறியப்படும் நடிகர் ஆர்யாவோடு அவரது சிறந்த நண்பர்களாகவும் மற்றும் பிரபல தமிழ் திரைநட்சத்திரங்களாகவும் திகழும் ஷியாம், பரத் மற்றும் கலையரசன் ஆகியோர் இணைகின்றனர். மணமகனான ஆர்யாவின் சமூக வாழ்க்கை குறித்த கிளுகிளுப்பான துணுக்குகளோடு இந்த வார நிகழ்ச்சியானது குதூகலமான தருணங்கள் நிறைந்ததாக இருக்கப்போகிறது. இதுவரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை நோக்கி பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்ற இந்த பிரபலங்கள், தங்களது திரையுலக பயணத்தின் ஆரம்ப கட்டங்களில் ஆர்யாவுடன் இணைந்து பணியாற்றிய தங்களது நெருக்கமான, பசுமையான நினைவுகளையும் பகிர்ந்துகொள்கின்றனர்.
பல சுவையான செய்திகளையும்,திருப்பங்களையும், திருப்பு முனைகளையும் கொண்ட இந்த வார நிகழ்ச்சியில் நடிகர் ஷியாம் ஆர்யாவின் கடந்த கால உறவுகள் குறித்த தகவலையும் வெளிப்படுத்தவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியானது கலர்ஸ் தமிழ் சேனலில் 2018 மார்ச் 12-ல் திங்கள்கிழமையன்று இரவு 08:30 மணியிலிருந்து9:30 மணிவரை ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த சேனல் இப்போது அனைத்து முன்னணி கேபிள் வலையமைப்புகளிலும் மற்றும் அனைத்து டிடீஹெச் செயல்தளங்களிலும் காணக்கிடைக்கிறது – சன் டைரக்ட் (CHN NO 128), டாடா ஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ் டிவி (CHN NO 1808) மற்றும் வீடியோகான்D2H (CHN NO 553).
கலர்ஸ் தமிழ் குறித்து: 2018பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்படுகிற கலர்ஸ் தமிழ், Viacom18குடும்பத்திலிருந்து வெளிவருகின்ற புதிய,குடும்ப பொழுதுபோக்கு சேனலாகும். ஒரு பெண்ணையும், அவளது குடும்பத்தையும் கொண்டாடுகிற,உத்வேகமளிக்கிற, உணர முற்படுகிற தனித்துவமான,வலுவான கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகளின் மூலம் உலகெங்கும் வாழ்கிற தமிழ் பேசும் பார்வையாளர்களை மகிழ்விப்பதே இந்த சேனலின் நோக்கமாகும். ‘இது நம்ம ஊரு கலரு‘ என்ற விருதுவாக்குடன் களமிறங்கியிருக்கிற கலர்ஸ் தமிழ், கதை சொல்வது மீது முதன்மையான கவனத்தை செலுத்தும் தரமான,புதுமையான நிகழ்ச்சி அமைப்புகளின் வழியாக சிறப்பான பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு கலாச்சாரத்தை அடைப்படையாகக் கொண்டதாக இதன் நிகழ்வுகள் இருக்கும். வேலுநாட்சி, பேரழகி,சிவகாமி, ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை, கலர்ஸ் சூப்பர் கிட்ஸ் போன்றவை எமது சேனலில் ஒளிபரப்பப்படவுள்ள சில முக்கிய நிகழ்ச்சிகளாகும். இன்னும் பல ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி இரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த வரவிருக்கின்றன.
Thanks & Regards,
G. Sreenivasan
Head Regional Media
#10/ 3C, 2nd Floor | Saga Kalyani Arcade | Cenotaph Rd | Teynampet |Chennai 6000 18
M: + 91 98411 09712 | L: + 91(44) 24312556, 57 | www.brand-comm.com