November 29, 2023

தமிழும், தேசியத்திலும் சிவாஜியின் ஆளுமை – இலக்கிய கூட்டத்தில் புகழாரம் ……

தமிழும், தேசியத்திலும் சிவாஜியின் ஆளுமை – இலக்கிய கூட்டத்தில் புகழாரம் ……
 
 

தமிழும், தேசியத்திலும் சிவாஜியின் ஆளுமை – இலக்கிய கூட்டத்தில் புகழாரம் ……
 
 
 
 

தமிழும், தேசியத்திலும் சிவாஜியின் ஆளுமை

இலக்கிய கூட்டத்தில்  புகழாரம் ….

 

       சென்னை  எஸ்.ஆர்.எம் .பல்கலை கழக  அரங்கத்தில்  நேற்று மாலை  நக்கீரர் தமிழ்ச் சங்கம்,எஸ்.ஆர்.எம் .பல்கலை கழக பாரிவேந்தர்  தமிழ் மாணவர் மன்றம்   சார்பில்  மு.ஞா..செ.இன்பா  எழுதிய  கலைமகள் கைப்பொருள்  சிவாஜி  ஆளுமை 

நூலின்  திறனாய்வு  இலக்கிய  விழாவாக நடைப் பெற்றது 

 

          நக்கீரர் தமிழ்ச் சங்கத்தின்  தலைவர்  முனைவர் வி .முத்து தலைமை  தாங்கினார் ..விழாவில் இலக்கியவாதிகள் சிவாஜியின் ஆளுமையை  குறித்து பேசினார்கள் ..

 இளைய சமுதாயத்தை  சேர்ந்த சீதா லட்சமி .,செல்வி ,ஸ்வீட்லின்,செல்வி .வினோதினி  ஆகியோரின்  ஆய்வு உரையுடன்  விழா தொடங்கியது .

          தமிழ் பேராயத்தின்  செயலர்  முனைவர் .கரு .நாகராஜ்  அவர்கள் தேசியத்திலும் .நடிப்பிலும்  சிவாஜி  என்ற  காண்ணோட்டத்தில்   இலக்கிய உரையை  தொடங்கி  பேசும்போது  சிவாஜி நிஜ வள்ளலாக வாழ்ந்தார்  ,கட்டபொம்மனையும் .கர்ணனையும்,  சிவனையும்  தமிழினத்திற்கு அடையாளபடுத்தியவர் சிவாஜி என்று குறிப்பிட்டார் ..

        இலக்கிய திறனாய்வாளர்  கொடைக்கானல் காந்தி  அவர்கள்  கலைமகள்  கைப்பொருள் சிவாஜி ஆளுமை  நூல்  ஒரு  வரலாறு குறித்த பொக்கிஷம் ,சிவாஜியை குறித்து  வந்த நூல்களில்  இது ஒரு  மணிமகுடம் .எழுத்தாளர்கள் கருத்து சுதந்திரத்தை  யாருக்காவும்  இழந்துவிடக்கூடாது ..இன்பாவின்  கருத்து சுதந்திரம் அவரின்  கோணத்தில்  தெளிவாக  உள்ளது …ஆங்கில எழுத்தாளர்களை  போன்ற  ஆளுமையை   இந்நூலைலில் பார்த்தேன் இது ஒரு அற்புத தேடல் .என்றார்

 

          மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர்  மல்லை சத்யா பேசும்போது  சிவாஜியின் நாடக  காலத்தில்  இருந்து அண்ணாவின்  தம்பியாக  வாழ்ந்த காலம் வரை  அழகாக  பட்டியல் இட்டார் விழாவில்  அகமதாபாத்  தமிழ்ச் சங்கத்தின்  தலைவர்  முனைவர் கவிதாஸ் 

 

எஸ்.ஆர்.எம்   பல்கலை கழக தமிழ் பேராயத்தை  சேர்ந்த  அருணாச்சலம் .பந்தள பதிப்பக  சிவா,  எழுத்தாளர் தொல்காப்பியன் ,மக்கள் தொடர்பாளர்  செல்வரகு.ஆகியோர் கலந்து கொண்டனர் ..

விழா ஏர்பாடுகளை  நக்கீரர் தமிழ்ச்  சங்கத்தின் பொது செயலர்  மீடியா  பாஸ்கரன் கவனித்தார் … 

 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *