
பாரம்பரிய மருத்துவர்களை அரசு பதிவு கொடுக்க வேண்டும்
மருத்துவ நலவாரியம் கிடப்பில் உள்ள நிலையில், அதை சரி செய்து பாரம்பரிய மருத்துவர்கள் அனைவரையும் அதில் சேர்க்க உதவி செய்ய வேண்டும்
தமிழக முழுவதும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும், யுனானி, ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், ஹிப்னோதெரபி, பஞ்சகர்மா மருத்துவர்களின் நிலைமையை சரிசெய்யுமாறு! நமது தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக் கொள்க்றோம்.
தங்களுக்கு அரசிடமிருந்து ஏதாவது ஒருவகையில் உதவி அல்லது பதிவு, அல்லது உரிமை கிடைக்காதா? என்றும் ஏங்கும் எங்கள் பாரம்பரிய அனுபவ மருத்துவர்களுக்கு அரசு நல்வழி காட்டிட வேண்டுகிறோம்.
எல்லாத் துறைகளிலும் இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் தமிழ்நாடு இருந்து வருகிறது. அதுபோல் நமது தமிழகத்தில் தமிழ் மருத்துவம் அழிந்து வரும் நிலையில் புத்துயிர் கொடுத்து தமிழக சித்தா, பாரம்பரிய மறுத்துவர்களின் பாரம்பரியத்தையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்படியும் மிகவும் தாழ்மையுடன் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய மருத்வர்கள், பலவித மருத்துவ முறைகளைக் கையாளும் நாட்டு மருத்துவர்! அல்லது பரம்பரை வைத்தியர்களிம் உண்டு. அவர்கள் தங்கள் ஊரிலியே வசித்து மக்களுக்கு முதலுதவி தருகிறார்கள். இவர்களில் பலர் எந்த நிறுவனத்திலும் இதற்கான பயிற்சி பெற்ற – பெறாதவர்களானாலும், தங்கள் ஊரிலேயே மக்களுடன் இணைந்து வாழ்வதால் ஊர் மக்கள் இவர்களை அதிகமாக அணுகுகின்றனர் எனவே இந்த வைத்தியர்களுக்கு தத்தம் பணி மதித்து, இவர்கள் இந்திய முறைகளில் பலவற்றில் தனித்தனி முறையாலும் பலமுறைகளை இணைத்தும், தேவைக்கேற்றவாறு இந்திய முறைப்படி வைத்தியம் செய்ய அரசு அனுமதிச்சான்றிதழ் வழங்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
பாரம்பரிய, அனுபவ மருத்துவர்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியாரின் பரிந்துறையின்படி, அனுபவ சான்று வழங்க அனுமதி தறுமாறு, தமிழக அரசிடமும் மருத்துவ கவுன்சிலிடமும் கேட்டுக் கொள்கிறோம்.
எங்களின் கோரிக்கைகளை ஏற்று நம் தமிழக அரசு நல்ல வழிகாட்டுதலை, வழங்கவும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம் என்று தமிழ்நாடு அனைத்து முறை அனுபவ மருத்துவர்களின் சங்கங்கள் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது
இடம் – சேப்பாக்கம், சென்னை
நாள் – 19-06-2018