December 5, 2023

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில்பட்டியில்

தமிழ்நாடு நாடார் சங்கத்தின் முதல் மாநில மாநாடு கோவில் பட்டி வேலாயுதம் எம்.எஸ்.பி திருமண மண்டபத்தில் நடந்தது. இம்மாநட்டில் 10 தீர்மானங்கள் அறிவிக்கபட்டது.
1) மாநில அரசு! கோவில்பட்டியில் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அனைத்து விளையாட்டுகளுக்கும் விளையாட்டு அரங்கங்கள் புதியதாக உருவாக்கிட வேண்டும்.
2) மத்திய அரசு! சிறுகுறு தொழில் முனைவர்களையும், கூலித் தொழிலாளர்களையும் காப்பாற்றிடும் வகையில் கடலை மிட்டாய், தீப்பெட்டி போன்ற குடிசைத் தொழில்களுக்கு 100 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு இரத்து செய்திட வேண்டும்.
3) பனை மர விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் பனம் பாலை இறக்கி விற்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கிட வேண்டும்.
4) திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
5) கோவில்பட்டி மாநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
6) குமரி, மதுரை இரட்டை ரெயில் பாதை திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.
7) மதுரை, திருவனந்தபுரம், இரயில்வே கோட்டத்தை பிரித்து. திருநெல் வேலியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டமாக மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
8) தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிடங்கள் இருக்கின்றதா? என ஆய்வு செய்து புதியதாக கழிப்பிடங்களை கட்டிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
9) கோவில்பட்டியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆக்கி மைதானத் திற்கு தமிழர்களின் பெருமையை உலகறிய செய்திட்ட. -தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த உலக காவல் துறை துணைத்தலைவராக செயல்பட்டு சிறப்பு சேர்த்த ஐ.ஜி. அருள் அவர்களின் பெயரை சூட்டிட வேண்டும்.
10. அன்னிய நாட்டு சதியால் முடக்கப்பட்டுள்ள தாதுமணல் ஆலைகளை திறந்து வேலை இல்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் 56 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தம் ஏற்பட்டிட மத்திய, மாநில அரசுகள் தாதுமணல் தொழிற்சாலைகளை உடனடியாக திறந்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மாநாட்டில் தலைமை முத்து ரமேஷ் நாடார், சிறப்பு அழைப்பாளர்ஹாரி நாடார்,
(நாடார் மக்கள் சக்தி) புழல் தருமராஜ், (பெருந்தலைவர் மக்கள் சக்தி) மாநாட்டு பொருளாளர்கா.ச.மு.கார்த்திகேயன் நாடார், (தமிழ்நாடு நாடார் சங்கம்) துணைதலைவர் வி.எல்.சி ரவி நாடார், பொதுசெயலாளர்பால்ராஜ் (தமிழ்நாடு நாடார் சங்கம்) நிகழ்ச்சி அமைப்பாளர் கோவில்ப்பட்டி தேன்ராஜ் மற்றும் பல நாடார் சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *