September 25, 2023

தீரன் அதிகாரம் ஒன்று படம் பற்றி டி ஜி பி ஜாங்கிட் & சூர்யா சொல்வது என்ன ?

சூர்யா : 
 
 ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து காவல்துறை  அதிகாரிகளின்  வாழ்நாள் முழுக்க  தொடரும் வழக்குகளை  வைத்து எடுக்கப்பட்ட படம்.
 
எவ்வளவுதான் கற்பனை செய்தாலும் உண்மை சம்பவம்தான்  நம்மை பிரமிக்க வைக்கும்.
 
தமிழ் நாட்டில் 10 வருடங்களாகக்  கண்டு பிடிக்க முடியாத ஒரு வழக்கை இருபது காவல்துறை அதிகாரிகள் சேர்ந்து எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை.
 
இயக்குநர் வினோத்தின் எழுத்தும், இயக்கமும் சதுரங்க வேட்டையில் எப்படி பேசப்பட்டதோ அதேபோல் இதிலும் பேசப்படும்

ஜிப்ரானின் இசை அருமையாக உள்ளது.
 
சத்யாவின் ஒளிப்பதிவு முழுமையாக பிரமிப்பை ஏற்படுத்தியது.
 
இந்த படத்தின் மூலமாக அதிக விஷயங்கள் வெளியில் தெரிகிறது.
 
ஒரு காவல் துறை அதிகாரி வாழ்கையில் என்ன என்ன நடக்கின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.
 
உண்மையான சம்பவத்தோடு சேர்த்து கமர்ஷியல் படம் எடுத்துள்ளார்கள்.
 
திரையரங்கில் வந்து இந்த படத்தை பாருங்கள் “
********************************************************************************************
 
டி ஜி பி  ஜாங்கிட் 
 
”  படம் மிக அருமையாக வந்துள்ளது.
 
உண்மையில் அந்த பவ்ரியா குழுவை பிடிக்கும் மிஷனுக்கு நாங்கள்தான் தலைமை வகித்தோம்.
 
எப்படி அந்த சம்பவங்கள் போலீஸ் பார்வையில் நடந்ததோ  அது அப்படியே படமாக வந்துள்ளது.
 
நடிகர் கார்த்தியையும் இயக்குநர் வினோத்தையும் நான் ரொம்ப பாராட்ட வேண்டும்.
 
 
ஆரம்பம் முதல் எப்படி பவ்ரியா மிஷனை செயல் படுத்தினோம்…..
 
  எப்படி பத்து ஆண்டுகள் தமிழ் நாட்டில் அவர்கள் கொள்ளை கொடூரக் கொலை  சம்பவங்கள்  செய்தார்கள்….
 
அவர்களை நாங்கள் எப்படி பிடித்தோம்….
 
அதில் இரண்டு பேரை நாங்கள்  எப்படி என்கவுன்ட்டர்  செய்தோம்….
 
பதிமூன்று பேரை உயிரோடு பிடித்தோம் என்பதையும்…
 
 அதே போன்று உயர் நீதிமன்ற தீர்பையும் சரியான  முறையில் சேர்த்து செய்துள்ளார்கள்.

 
இந்த படத்தில் காணப்படும் அனைத்தும் உண்மை.
 
ரொம்ப கஷ்டப்பட்டு பவ்ரியாவுக்கு சென்று நடித்துள்ளீர்கள். 
 
கார்த்திக்கு கமாண்டோ பயிற்சி எவ்வளவு அளித்திருப்பார்கள் என்று நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
 
குதிரை சவாரி, கமாண்டோ காட்சிகளை பார்க்கையில் சமீபத்தில் வந்த சோலோ படம் போல் அருமையாக இருந்தது.
 
 
 
பட குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
 
அருமையான தயாரிப்பு.
 
எல்லா காவல் துறையினருக்கும் இந்த படம் பிடிக்கும் “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *