துணிவு
(திரை விமர்சனம் )
ஜி ஸ்டுடியோஸ் மற்றும் போனிகபூர் இனைந்து தயாரிக்கப்பட்ட படைப்பு
நடிப்பு: அஜித் குமார் மஞ்சு வாரியர் சமுத்திரக்கனி மகாநதி சங்கர் மற்றும் பலர் ஒளிப்பதிவு நீரவ்ஷா எடிட்டிங் விஜய் வேணு குட்டி இசை ஜிப்ரான் எழுத்து இயக்கம் அ வினோத்
கதை: யுவர்ஸ் பேங்க்கின் ஷேர்மேன் தனது பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களி டம் பங்குச்சந்தையில் முதலீட்டை செலுத்தினால் நல்ல பலன் உண்டு என்று ஏமாற்றி கடன் வாங்கும் அட்டையை விற்று மக்களிடம் பணத்தை லாவகமாக கொள்ளையடித்து ஏமாற்றி 25 ஆயிரம் கோடி பணத்தை யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைக்கிறான்
அது மட்டுமல்லாமல் பேங்கில் தனது ஆட்களையே ரகசியமாக உளவ விடுகிறான் இதற்கிடையே காவல்துறையின் உயர் அதிகாரி வெளிநாட்டு மாமியா கும்பலுடன் சேர்ந்து பேங்கில் 500 கோடி இருப்பதாக எண்ணி கொள்ளையடிக்க வருகிறார்கள் அவர்களுக்கு தண்ணி காட்டும் இன்னொரு மாபியா கும்பலின் தலைவன் அஜித் குமார் தோன்றி அவர்களை கொள்ளை அடிக்க விடாமல் செய்வதுடன் அந்த பேங்கில் 25 ஆயிரம் கோடி இருப்பதை மக்களுக்கும் நாட்டிற்கும் எப்படி எடுத்துரைக்கிறார் என்பதே இப்படத்தின் கதை
திரைக்கதையில் முதல் பாதி அஜித் குமார் நடித்து வெற்றி பெற்ற பில்லா பாகம் ஒன்று மங்காத்தா போன்ற படங்களை நினைவு கூறுகிறது இரண்டாம் பாகம் தான் துணிவு படத்தின் கதைக்களமாக மலர்கிறது
பேங்கில் திருட வந்த திருடர்கள் 500 கோடியை தாண்டி 25 ஆயிரம் கோடி இருப்பதை அறிந்து ஷாக் ஆகும்போது அவர்களுடன் நம்மையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முதல் டூவிஸ்ட் இதற்கெல்லாம் காரணம் பேங்கின் ஷேர்மேன் தான் என்கின்ற இரண்டாவது டுவிஸ்ட் மாபியா கும்பலில் ஏற்பட்ட மோதலில் தன் உயிரை காப்பாற்றிய நேர்மையான பேங்க் ஊழியனின் ஆசையை நிறைவேற்ற பேங்க் பணத்தை மக்களிடம் திருப்பித் தரப் போராடும் அஜித் குமார் என்ற மூன்றாவது டூவிஸ்ட் படத்தை தூக்கி நிறுத்துகிறது
நம்மை வியக்க வைக்கிறது
இதற்காக இயக்குனர் அ வினோத் அவர்களை மனதார பாராட்டலாம் ஆங்கில படத்திற்கு இணையான துப்பாக்கி சண்டைகள் வெடித்து சிதறும் கார்கள் நடுக்கடலில் சாகசம் செய்யும் படகுகள் வானில் பறக்கும் ஹெலிகாப்டர்கள் என்று சாகசமான காட்சிகளும் நம்மை வியக்க வைக்கின்றன
கமிஷனர் சமுத்திரக்கனியின் காட்சிகள் தான் படத்திற்கு பலவீனத்தை தருகிறது நாயகன் அஜித் குமார் பற்றிய பின்னணி மிக குறைவாகவே உள்ளது இவைகளை தவிர்த்துப் பார்த்தால் படம் அற்புதம்
அஜித் குமார்:
படம் முழுவதும் ஒரே ஆடை அவருக்கே உரிய நரைத்த முடி தாடி உருவத்துடன் எதார்த்தமாக நடித்த நடிப்பும் பில்டப் சாங்கில் நடனம் ஆடாமல் கதாநாயகியோடு டூயட் பாடாமல் பஞ்ச் டயலாக் பேசாமல் சிரித்த முகத்துடன் நகைச்சுவை ததும்பும் வில்லத்தனத்தையும் அதில் அழகான ஹீரோயிசத்தையும் மிக அற்புதமாக வெளிப்படுத்தியமைக்கு அவரைப் பாராட்டலாம் இதுவே அவரின் துணிவு என்றே சொல்லலாம் நடனத்திலும் சண்டைக் காட்சிகளும் தனி முத்திரையை பதிக்கிறார்
பிளாஷ்பேக் கதையில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் பேங்கில் பணிபுரியும் நேர்மையான இளைஞன் பற்றிய கதையை தனக்கு சம்பந்தமில்லாமல் போனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நடித்த அஜித்குமாரை பாராட்டலாம்👌👌👌👌👌👌
மஞ்சு வாரியார் ஆங்கிலப் பட கதாநாயகிகளுக்கு இணையான நடிப்பை சாகசமாக கோபம் கலந்த முகத்துடன் அழகாக வெளிப்படுத்தி உள்ளார்
மகாநதி சங்கரின் நகைச்சுவை நம்மை உற்சாகப் படுத்துகிறது
மொத்தத்தில் துணிவு வங்கியில் கணக்கு துவங்குவதில் தொடங்கி கடன் வாங்குவதில் மக்களுக்கு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தும் படமாகவும் நல்ல கருத்துள்ள பாடமாகவும் மக்களுக்கு தன்னம்பிக்கை துணிவை ஏற்படுத்தி உள்ளது
— விக்ராந்த் பிரபாகரன்